கோலாலம்பூர் – கடந்த இரண்டு நாட்களாக வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த பெர்சே 4.0 பேரணியில் இரண்டு இலட்சம் பேர் கலந்து கொண்டார்கள் என்பது எண்ணிக்கை என்றால், பேஸ்புக், வாட்ஸ்எப் போன்ற நட்பு ஊடகங்களில் அந்த எண்ணிக்கையை விட அதிகமாகவே புகைப்படங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன எனலாம்.
அந்த அளவுக்கு இணையப் பக்கங்களையும், செல்பேசித் தளங்களையும் புகைப்படங்களால் வாரி இறைத்து நிறைத்துவிட்டார்கள் ஆர்வலர்கள்.
அவற்றிலிருந்து சில சுவாரசியப் படக் காட்சிகள் செல்லியல் வாசகர்களின் பார்வைக்கு:-
அரேபிய ஷேக் போன்று உடுத்திக் கொண்டுள்ள ஒருவர் 2.6 பில்லியன் பணத்தை வழங்குவது போன்ற காட்சியை உருவகப்படுத்தி கிண்டல் செய்யும் பங்கேற்பாளர்கள். 2.6 பில்லியன் பணம் அரேபிய வணிகர் ஒருவரால் நன்கொடையாக வழங்கப்பட்டது என அம்னோவைச் சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர்.
காலை ஒன்றை இழந்தாலும், போராட்ட உணர்வை இழக்காத ஒருவர் பேரணியில் பங்கேற்ற இந்தக் காட்சி – நட்பு ஊடக வலைத் தளங்களில் சுழன்றடித்து, பகிரப்பட்டது. அவர் கைத்தாங்கலாக ஏந்தி வரும் ஊன்றுகோல்களும் மஞ்சள் நிறத்தில் இருப்பதை கவனியுங்கள்…
ஜசெகவின் முன்னாள் செனட்டர் இராமகிருஷ்ணன், ஆதரவாளர்கள், நண்பர்களுடன் பங்கேற்ற காட்சி…
பேரணியில் பங்கேற்ற வழக்கறிஞர் ஆறுமுகம், உதயசூரியன், ஆகியோர்…
சமூகப் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபடும் அருள்தாஸ் (சிவப்பு மேல் ஜேக்கெட்டுடன்) தனது நண்பர்கள், ஆதரவாளர்களுடன்…
வேன் ஒன்றும் பெர்சே 4 என்ற வாசகங்களுடன் வண்ணம் மாறியுள்ள காட்சி…
தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் பகுதியிலிருந்து பேரணிக்குப் புறப்படத் தயாராகும், பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி, சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயகுமார், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சாண்டியகோ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகரன் ஆகியோர்…
சினிமாவில் வரும் ஸ்பைடர்மேன் பாணியில் உடை உடுத்தி, பேரணியையே கலக்கிய ஒருவருடன் தம்படம் (செல்பி) எடுத்துக் கொள்ள முனையும் பங்கேற்பாளர் ஒருவர்…
நாய் ஒன்றுக்கும் பெர்சேயின் மஞ்சள் ஆடை அணிவிக்கப்பட்டிருக்கும் காட்சி…
தொகுப்பு: செல்லியல்