இம்பால் – மணிப்பூர் மாநிலச் சட்டசபையில் இயற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின மக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
மணிப்பூருக்குள் வெளி மாநிலத்தவர் மற்றும் எல்லைப் பகுதியில் வசிப்போர் நுழைய அனுமதிக்கும் சட்டத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் இதனால் பெரிதும் பாதிப்பிற்குள்ளாவார்கள் எனக் கூறிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டம் தீவிரமடைந்து வன்முறையாக மாறியது.
இந்நிலையில், வன்முறைக் கும்பல் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் புழங்காதங் டோன்சிங் வீட்டிற்குத் தீ வைத்தது; மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரது வீட்டிற்கும் தீ வைத்தது.
வன்முறை கும்பலைக் கலைக்கக் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.மேலும் ஒருவர் தீ வைப்புச் சம்பவத்தில் சிக்கி பலியானார்.
அங்கு தொடர்ந்து பதற்றமானசூழ்நிலை நிலவுவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.