Home உலகம் வெனிசுலா சிறை தீப்பற்றி எரிந்தது: 17 பேர் பலி!

வெனிசுலா சிறை தீப்பற்றி எரிந்தது: 17 பேர் பலி!

952
0
SHARE
Ad

8aff6fc7-7edd-4295-9675-efb5736bc14e_S_secvpfகாரபோபா – . வெனிசூலாவின் வடக்குப் பகுதியில் காரபோபா மாநிலத்தில் உள்ள டோகுயிட்டோ சிறைச்சாலையில், நேற்று அதிகாலையில் மின்கசிவு காரணமாகப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இத் தீவிபத்தில் 8 பெண்கள் உட்பட 17 கைதிகள் உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.

11 பேர் உடல் வெந்த நிலையில் வேலன்சியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

#TamilSchoolmychoice

ஒரு சிறிய அறையில் பலர் அடைக்கப்பட்டிருந்ததே நிறையப் பேர் உயிர் இழக்கக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்தச் சிறையில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் அளவுக்கு அதிகமான சிறைக் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

900 கைதிகளுக்காகக் கட்டப்பட்ட இந்தச் சிறையில் தற்போத 1800 கைதிகளுக்கும் மேல் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்பு நவம்பர்  மாதம் இங்கு நடந்த சிறைக் கலவரத்தில் 35 கைதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.