Home உலகம் நீலப்பட நடிகையின் படத்துடன் பயணச் சீட்டு: உடனடியாக விற்றுத் தீர்ந்தது!

நீலப்பட நடிகையின் படத்துடன் பயணச் சீட்டு: உடனடியாக விற்றுத் தீர்ந்தது!

848
0
SHARE
Ad

39ccb55b-480d-4be9-b4ec-ec7aa037a7f9_S_secvpfதைவான் – தைவானில் ஜப்பானிய நீலப்பட நடிகை யூய் ஹட்டானோ புகைப்படம் அச்சிடப்பட்ட பேருந்து மற்றும் ரயில் பயண அட்டைகள் விற்பனைக்கு வந்த  நான்கே மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன.

அந்தப் பயணச் சீட்டில் யூய் ஹட்டானோ  ஆடை அணிந்திருந்தாலும், பயணச் சீட்டில் ஆபாசப் பட நடிகையின் படத்தை அச்சிட்டிருப்பதற்குப் பொதுமக்கள் சிலர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதை விட, அதை விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், தொழில் தர்மத்தோடு பல கடைகள் அவற்றை விற்பதற்கும் மறுத்து விட்டன. அதனால் அந்த அட்டைகளை தயாரித்திருந்த நிறுவனம்  தொலைபேசி மூலம் மட்டும் அவற்றை விற்றது.

#TamilSchoolmychoice

ஆனால், இதை லாப நோக்கில் செய்யவில்லை என்றும், இதை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைச் சமூகத் தொண்டுக்குச் செலவிடவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.