Home இந்தியா தனி நபரின் பேச்சை கண்டுகொள்ளத் தேவையில்லை – அழகிரிக்கு ஸ்டாலின் பதிலடி! 

தனி நபரின் பேச்சை கண்டுகொள்ளத் தேவையில்லை – அழகிரிக்கு ஸ்டாலின் பதிலடி! 

639
0
SHARE
Ad

stalin-mk-alagiriசென்னை – “திமுக என்றால் அது கருணாநிதி தான். ஸ்டாலினை முன்னிறுத்தினால் திமுக படுதோல்வி அடையும்” என்று சென்னையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மு.க.அழகிரி கூறியிருந்தார்.

இந்நிலையில், அழகிரியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கருணாநிதி தான் முதல்வர் வேட்பாளர் என துவக்கம் முதலே கூறி வருகிறேன். முதல்வர் ஆகும் எண்ணத்தோடு நான் எப்போதும் இருந்ததில்லை. நான் முதல்வர் வேட்பாளர் என, என்றும் கூறியதும் இல்லை. கட்சியில் பிரச்சனையை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்து வருகின்றனர். அவர்களின் பேச்சுக்கு திமுக-வும், நானும் முக்கியத்துவம் தர வேண்டிய தேவையில்லை” என்று கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக அழகிரி-ஸ்டாலின் பிரச்சனை ஓய்ந்திருந்த நிலையில், தேர்தல் நெருங்கும் சமயத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஏற்கனவே, 2ஜி விவகாரம் எப்போது வெடிக்குமோ என அச்சத்தில் இருக்கும் திமுக-விற்கும், கருணாநிதிக்கும் அழகிரி-ஸ்டாலின் பிரச்சனை மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.