டமாஸ்கஸ் – துருக்கி எல்லை அருகே கடற்கரைப் பகுதியில் ஒதுங்கிய சிரியா நாட்டைச் சேர்ந்த கைக்குழந்தையின் உடல், உலகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ள நிலையில், பலியான ஆலன் குர்தி என்ற அந்த சிறுவனின் தந்தை, பிரபல செய்தி நிறுவனம் ஒன்றில் கூறியுள்ள தங்களின் கண்ணீர்க் கதை, நெக்குருக வைக்கிறது.
“கிரீக் தீவுப் பகுதியில் கரை சேர்வதற்காக துருக்கிக்கு படகை திருப்பினார்கள். அப்போது மிகப் பெரும் அலை எங்கள் படகை தாக்கியது. உடனே படகை ஓட்டி வந்தவர்கள் பாதுகாப்பு கருவிகளுடன் கடலில் குத்தித்து நீந்தி தப்பித்தனர். நான் படகை கட்டுப்படுத்துவதற்கு முயற்சித்தேன். என்னால் முடியவில்லை. படகு கவிழ்ந்து விட்டது. என் கண்முன்னே என் குடும்பத்தினர் ஒவ்வொருவராக நீரில் மூழ்கினர். என்னால் என் குழந்தைகளைக் கூட காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.”
“அவர்கள், உலகின் அழகான குழந்தைகள். இனி அவர்களின் கல்லறை தான் என் வலிக்கான நிவாரணி” என்று அவர் தெரிவித்துள்ளார்.