Home கலை உலகம் ஜெயம் ரவியுடன் லட்சுமி மேனன் முதன்முதலாக இணையும் படம் ‘மிருதன்’

ஜெயம் ரவியுடன் லட்சுமி மேனன் முதன்முதலாக இணையும் படம் ‘மிருதன்’

739
0
SHARE
Ad

03-1441273795-miruthan-poster354-600சென்னை – ஜெயம் ரவியும் லட்சுமி மேனனும் முதல் முறையாக இணையும் படத்திற்கு ‘மிருதன்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

இப்படத்தைத் தேமுதிக-வின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினரான மைக்கேல் ராயப்பனின் ‘குளோபல் இன்ஃபோடெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிறுவனம் ஏற்கனவே நாடோடிகள்,மாயாண்டி குடும்பத்தார்,சிந்து சமவெளி, கோரிப்பாளையம், பட்டத்து யானை உட்பட பல படங்களைத் தயாரித்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்தப் படத்தை  நாணயம், நாய்கள் ஜாக்கிரதை ஆகியபடங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்குகிறார். வடகறி படத்துக்கு ஒளிப்பதிவு செய்த எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இசை டி.இமான்; பாடல்கள் மதன் கார்க்கி.

மிருதன் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஊட்டியில் 30 நாட்கள் நடைபெற்று முடிந்தது.

அடுத்த கட்டப் படப்பிடிப்பு இம்மாதம் 18-ஆம் தேதி சென்னையில் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து ஐதராபாத்திலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு நடத்தி, அக்டோபர் மாத இறுதிக்குள் முழுப் படத்தையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.