Home இந்தியா டில்லி, பெங்களூர் விமான நிலையங்களுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல்!

டில்லி, பெங்களூர் விமான நிலையங்களுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல்!

628
0
SHARE
Ad

ChangiTerminal1909eபுதுடில்லி – டில்லி மற்றும் பெங்களூர் விமான நிலையங்களுக்கு ஒரு மர்ம ஆசாமி தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதைத் தொடர்ந்து  இரு விமான நிலையங்களிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு, பாதுகாப்புப் படையினரும் வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடைமைகளும் தீவிர சோதனைகளுக்குப் பிறகே உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

அந்த மர்ம நபர் டில்லி மற்றும் பெங்களூரிலிருந்து புறப்படும் 6 விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் கூறியதால், அனைத்து விமானங்களும் உடனடியாக நிறுத்தப்பட்டு, சோதனையிடப்பட்டன.

#TamilSchoolmychoice

வெடிகுண்டு ஏதும் இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகே விமானங்கள் புறப்பட்டுச் சென்றன.

இதனால் அதிகாலை முதலே பரபரப்பாகக் காணப்பட்ட டில்லி, பெங்களூரு விமான நிலையங்கள் தற்போதுதான் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன.

இரு விமான நிலையங்களுக்கும் மிரட்டல் விடுத்தது ஒரே நபர் எனத் தெரிய வந்துள்ளது. அவர் பெங்களூரின் தெற்குப் பகுதியில் இருந்து பேசியதாகக் கண்டறியப்பட்டுள்ளது.விரைவில் அந்த நபர் சிக்குவார் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

டில்லி, பெங்களூர் விமான நிலையங்களுக்கு வந்த மிரட்டலைத் தொடர்ந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திலும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.