கோலாலம்பூர் – 2015-ம் ஆண்டிற்கான மாபெரும் தீபாவளி கொண்டாட்டம் மற்றும் அனைத்துலக இந்திய வர்த்தகக் கண்காட்சியை அஸ்ட்ரோ பிரம்மாண்டமாய் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிமுக விழா கடந்த சனிக்கிழமை ஆஸ்ட்ரோ புக்கிட் ஜாலில் நடைபெற்றது.
இந்த அறிமுக விழாவில் ஆஸ்ட்ரோ நிகழ்ச்சிகளின் மூத்த துணைத்தலைவர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து, ஆஸ்ட்ரோ தமிழ் நிகழ்ச்சியின் துணைத் தலைவர் முருகையா வெள்ளை, நடிகர் விஷால், சூரி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் அக்டோபர் 2-ம் தேதி தொடங்கி, அக்டோபர் 4-ம் தேதி வரை, 3 நாட்களுக்குத் தொடர்ந்து ஜிஎம் கிள்ளான் வோல்சேல் சிட்டி (GM Klang Wholesale City) -ல் அமைந்துள்ள வாகனம் நிறுத்தும் வளாகத்தில் இந்நிகழ்வு நடைப்பெறவுள்ளது.தொலைத் தொடர்பு, இயற்கை வளம், சுற்றுலா, காப்புறுதி, தொழில்நுட்பம், ஜவுளி என பலதரப்பட்ட துறைகளைச் சார்ந்த கூடாரங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.
மேலும் ஆடல் பாடல், கேளிக்கை விளையாட்டு, பிரபலங்களின் சந்திப்பு, உள்ளூர் மற்றும் தமிழக முன்னனி நட்சத்திரங்களின் வருகை என 3 நாட்களுக்கு இந்நிகழ்வு பிரம்மாண்டமாக கலைகட்டப் போகிறது. ஆர்வமுள்ளவர்கள் www.astroulagam.com.my அகப்பக்கத்திற்கு இதற்கான மேல் விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
இணையதளம், தொலைக்காட்சி மற்றும் வானொலி வாயிலாக ஆர்வமுள்ள வணிகர்களுக்கு விளம்பரத்தை ஏற்படுத்தித் தர மிக ஆவலாய் உள்ளதாக அஸ்ட்ரோ அறிவித்துள்ளது. மேலும், அனைத்துலக ரீதியில் வணிகர்கள் கலந்து கொள்ளும் இந்த கண்காட்சியில் பங்கேற்பதன் வழி வணிகர்கள் தங்களின் வியாபாரத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லும் வாய்ப்பும் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
2015-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஆஸ்ட்ரோவின் மாபெரும் தீபாவளி கொண்டாட்டம் மற்றும் வர்த்தகப் பெருவிழாவில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்கள் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளன.
- 3 லட்சம் வருகையாளர்களை எதிர்பார்க்கலாம்
- இணையதளம், தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்களில் வருகையாளர்களை /பொதுமக்களை ஈர்க்கும்/ கவரும் இடைவிடாத விளம்பரங்கள் ஒளிபரப்பு
- அஸ்ட்ரோ ஊடகத் தளங்களில் உங்கள் விற்பனைகளை மேம்படுத்தல்
- இவ்வாண்டின் மாபெரும் பொழுதுபோக்கு மற்றும் வணிக ஒன்றுகூடல் நிகழ்வு
- அனைத்துலக வணிகர்களுடன் வியாபார வாய்ப்பு
- தமிழக முன்னனி நட்சத்திரங்களின் வருகை
- 12 மணி நேர இடைவிடாத பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள்
இப்படியாக இந்நிகழ்வு ஏற்படுத்தியதன் பல காரணங்கள் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆகவே ஆர்வமுள்ளவர்கள் தவறாமல் குறிப்பிட்ட அகப்பக்கதிற்குச் சென்று விவரங்களைப் பெற வேண்டும் என ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டு கொள்கின்றனர்.