Home கலை உலகம் விஜய், குஷ்பூ குறித்து டுவிட்டரில் அவதூறு – குஷ்பூ கடும் கண்டனம்!

விஜய், குஷ்பூ குறித்து டுவிட்டரில் அவதூறு – குஷ்பூ கடும் கண்டனம்!

915
0
SHARE
Ad

kushbooசென்னை – நட்பு ஊடகங்களில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து ஒருவரை ஒருவர் மாறி மாறி கேலி செய்து வருவது வாடிக்கையாகிவிட்ட நிலையில், பல சமயங்களில் இவர்கள் சண்டையில் டுவிட்டரில் இருக்கும் நட்சத்திரங்களும் சிக்கி விடுகின்றனர். பிரேம்ஜி அமரன் முதல் அரவிந்சாமி வரை இது தொடர்கதையாகி விட்டது. இந்நிலையில், நேற்று நடிகை குஷ்பூவையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை.

நிகழ்ச்சி ஒன்றில் குஷ்பூ, விஜயுடன் ஆடும் புகைப்படத்தை வெளியிட்டு இவர்கள் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளனர். இருவரும் சேர்ந்து ஆடுவதில் என்ன சர்ச்சை இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இருவருக்கும் பின்புறமாக மது பாட்டில்கள் இருப்பது தான் காரணம்.

மது ஒழிப்பிற்காக கட்சி ரீதியாக பிரச்சாரம் செய்யும் ஒரு சிலர் இது போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர் என்ற ரீதியில் பதிவுகளையும் வெளியிட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

twitterசர்ச்சையை கிளப்பி உள்ள புகைப்படம்

இதனால் கடும் கோபம் அடைந்த குஷ்பூ, “கேவலமான இவர்களின் செயல்களைப் பற்றி நான் கவலைப்படப்போவதில்லை. குறிப்பிட்ட நடிகர்களின் பெயரளவில் இருக்கும் இது போன்ற முட்டாள் தனமான ரசிகர்களை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. உங்களின் செயல்கள் என்னுள் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது” என்று அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வாரம் ஒரு நட்சத்திரம் என்கிற ரீதியில், நட்பு ஊடகங்களில் இவர்கள் செய்யும் காரியங்கள் எப்போது முடிவிற்கு வரும் என்று தெரியவில்லை