Home One Line P2 பிரபு வீட்டில் குஷ்பூ பிரச்சாரம்

பிரபு வீட்டில் குஷ்பூ பிரச்சாரம்

1024
0
SHARE
Ad

சென்னை : எதிர்வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களில் சென்னையில் உள்ள ஒரு தொகுதியான ஆயிரம் விளக்குத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் நடிகை குஷ்பூ.

வேட்புமனுத் தாக்கல் செய்த நாள்முதல் ஆயிரம் விளக்குத் தொகுதியில் தெருத் தெருவாக சென்று மக்களைச் சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகிறார் குஷ்பூ.

ஆயிரம் விளக்குத் தொகுதி என்பது திமுகவின் கோட்டைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அந்தத் தொகுதியில் சினிமாப் பிரபலமும், அதிமுக ஆதரவும் ஒருங்கிணைய, பாஜக வேட்பாளராகக் களமிறங்கும் குஷ்பூ இந்த முறை வெற்றி பெற்று அதிரடி அதிர்ச்சியை ஏற்படுத்துவாரா என்ற ஆர்வம் அரசியல் பார்வையாளர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

தனது பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இல்லத்திலும் நுழைந்தார் குஷ்பூ. அப்போது பிரபுவின் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து அவரை வரவேற்றனர். அந்தப் புகைப்படங்களைத் தனது டுவிட்டர் தளத்திலும் குஷ்பூ பதிவிட்டிருக்கிறார்.

ஒரு காலத்தில் பிரபு – குஷ்பூ இணைந்து நடித்த பல படங்கள் வெற்றியடைந்தன. சின்னத்தம்பியின் இமாலய வெற்றி இன்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அண்மையில் பிரபுவின் மூத்த சகோதரர் ராம்குமார் பாஜகவில் இணைந்தார். அவரும் குஷ்பூவை வரவேற்றார்.

அந்தப் படக் காட்சிகளையும் குஷ்பூவின் சில பிரச்சாரக் காட்சிகளையும் இங்கே காணலாம்: