கோலாலம்பூர்: அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெற்றிப் பெற்ற லீ சீ ஜிவாவை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பாராட்டினார். மேலும் அதிக வெற்றியை அடைய இது ஒரு படையாகப் பயன்படுத்துமாறு பிரதமர் லீக்கு அறிவுறுத்தினார்.
கெடாவைச் சேர்ந்த 22 வயது மட்டுமே ஆன லீக்கு, பூப்பந்து வாழ்க்கையில் இன்னும் பல வெற்றி ஆண்டுகள் இருப்பதாக பிரதமர் கூறினார்.
“லீ சீ ஜியா! நீங்கள் ஒரு தேசிய வீரர். இந்த வெற்றிக்கு மலேசிய பூப்பந்து சங்கத்திற்கும், பயிற்சியாளர்களுக்கும் வாழ்த்துகள். அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டியில் லீ சீ ஜியாவின் வெற்றி குறித்து அனைத்து மலேசியர்களும், குறிப்பாக பூப்பந்து இரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தார்.
பர்மிங்காமில் உள்ள யுடிலிடா அரங்கில் டென்மார்க்கின் விக்டர் ஆக்செல்சனை எதிர்த்து சீ ஜியா 30-29, 20-22, 21-9 என்ற செட் கணக்கில் வென்றார்.