Home One Line P1 இராமசாமி உட்பட புதியவர்கள் பினாங்கு ஜசெக மாநில தேர்தலில் வெற்றி

இராமசாமி உட்பட புதியவர்கள் பினாங்கு ஜசெக மாநில தேர்தலில் வெற்றி

559
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: நேற்று நடந்து முடிந்த பினாங்கு ஜசெக தேர்தலில் தோல்வியடைந்தவர்களில் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங்கும் அடங்குவார்.

முதல் 15 இடங்களைப் பெற போதுமான வாக்குகளைப் பெற அவர் பெறத் தவறிவிட்டார்.

பினாங்கு துணை முதலமைச்சர் பி.இராமசாமி, ஆட்சிக்குழு உறுப்பினர் ஜைரில் கிர் ஜோஹாரி மற்றும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் ஆகியோர் மாநில ஜசெக தலைமையின் புதிய முகங்கள் ஆவர்.

#TamilSchoolmychoice

இருப்பினும், கட்சி உச்சமன்றக் குழு உறுப்பினராக ராம்கர்பால் நியமிக்கப்பட்டார்.

நியமிக்கப்பட்ட மற்ற மூன்று பேர், சைர்லீனா அப்துல் ரஷீத், சோங் எங், ஹெங் லீ லீ மற்றும் லிம் சீவ் கிம் ஆவர்.

ஜசெக மாநில தேர்தலின்படி, அதிக வாக்குகளைப் பெற்ற 15 வேட்பாளர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவர். பின்னர் அவர்கள் மாநிலத் தலைமையின் பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கான தேர்வுகளை செய்வார்கள்.

புதிய பினாங்கு ஜசெக தலைமைப் பதவிகளின் பட்டியல்:

தலைவர்: சான் கோன் இயோ

துணைத் தலைவர்: பி.இராமசாமி

உதவித் தலைவர்: ஜைரில் கிர் ஜோஹரி, ஜகதீப் சிங் தியோ

செயலாளர்: லிம் ஹுய் யிங்

உதவி செயலாளர்: லிம் சீவ் கிம்

பொருளாளர்: வோங் ஹான் வாய்

உதவி பொருளாளர்: சூன் லிப் சீ

அமைப்பு செயலாளர்: ஜேசன் ஹங் மூய் லை

உதவி அமைப்பு செயலாளர்: லே ஹாக் பெங், யோஹ் சூன் ஹின்

விளம்பர செயலாளர்: ஸ்டீவன் சிம் சீ கியோங்

உதவி விளம்பர செயலாளர்: சீர்லீனா அப்துல் ரஷீத்

அரசியல் இயக்குநர்: தெஹ் லாய் ஹெங்

உச்சமன்றக் குழு உறுப்பினர்கள்: பீ பூன் போ, பீ பூன் சீ, ஆர்.எஸ்.என் ராயர், ராம்கர்பால் சிங், ஹெங் லீ லீ, சோங் எங்