Home கலை உலகம் அசல் குஷ்பு – இந்நாள் ‘சின்ன குஷ்பு’ ஹன்சிகா எடுத்துக் கொண்ட தம்படம்!

அசல் குஷ்பு – இந்நாள் ‘சின்ன குஷ்பு’ ஹன்சிகா எடுத்துக் கொண்ட தம்படம்!

1083
0
SHARE
Ad

சென்னை – அந்நாளில் தமிழ் சினிமா இரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் குஷ்பு. தற்போது அரசியல் மேடைகளில் கலக்கி வருவதோடு, தமிழகத்தின் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் ‘சிம்ப்ளி குஷ்பு’ என்ற  தலைப்பில் சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்து வருகின்றார்.

அவருக்குப் பின் வந்த நடிகைகளில் குஷ்புவுக்கு நிகராக யாருமே புகழ் பெற்றதில்லை – பெயர் வாங்கியதில்லை என்ற நிலையில், அண்மையக் காலமாக ஹன்சிகா மோத்வானி மட்டும் அழகிலும், நடிப்பிலும், மற்ற ‘அம்சங்களிலும்’ குஷ்புவுக்கு நிகராகப் பார்க்கப்படுகின்றார்.

தற்போது குஷ்பு நடத்தி வரும் தொலைக்காட்சித் தொடருக்காக ஹன்சிகாவைப் பேட்டி எடுத்துள்ளார் குஷ்பு. அந்தப் பேட்டியின் போது ஹன்சிகாவுடன் எடுத்துக் கொண்ட தம்படம் (செல்பி) ஒன்றை தனது டுவிட்டர் அகப் பக்கத்தில் குஷ்பு வெளியிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அந்தப் படம்:-

Kushboo-Hansika-Twitter

-செல்லியல் தொகுப்பு