புதுடெல்லி – தாவூத் இப்ராகிம் கும்பலால் சோட்டா ராஜனின் உயிருக்கு ஆபத்து நேரக்கூடும் என்பதால், அவரைப் போன்ற தோற்றமுடைய நபரையும் இந்தோனேசியாவிலிருந்து அழைத்து வந்துள்ளது குற்றப்புலனாய்வுத்துறை.
கடந்த அக்டோபர் 25-ம் தேதி பாலி தீவில் வைத்து இந்தோனேசிய காவல்துறையால் கைது செய்யப்பட்ட சோட்டா ராஜனை நேற்று குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் பாலியிலிருந்து டெல்லிக்கு அழைத்து வந்தனர்.
சோட்டா ராஜனைப் போலவே தோற்றமுடைய நபரையும் உடன் அழைத்து வந்து, அவரது உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவர்களை புத்திசாலித்தனமாகக் குழப்பியுள்ளனர் அதிகாரிகள்.
சோட்டாராஜனின் உயிருக்கு தாவூத் கும்பலால் மட்டுமல்லாமல், அவரது சொந்த கும்பலைச் சேர்ந்த சிலராலும் கூட ஆபத்து ஏற்படலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.
இதன் காரணமாக பல வியூகங்கள் வகுத்து அவரைப் பாதுகாத்து வருவது குறிப்பிடத்தக்கது.