Home Featured கலையுலகம் அஸ்ட்ரோ தங்கத்திரையில் தீபாவளி சிறப்புப் படங்கள்!

அஸ்ட்ரோ தங்கத்திரையில் தீபாவளி சிறப்புப் படங்கள்!

957
0
SHARE
Ad

Vaalu-love-endravan-single-trackகோலாலம்பூர் – அஸ்ட்ரோ தங்கத்திரையில் (அலைவரிசை 241) அண்மையில் திரைக்கு வந்த ‘வாலு’ – சிம்பு & ஹன்சிகா, ‘சகலகலா வல்லவன் – ‘ஜெயம்’ ரவி & த்ரிஷா, ‘இது என்ன மாயம்’ – விக்ரம் பிரபு, ‘சண்டி வீரன்’ – இயக்குநர் பாலா மற்றும் அதர்வா ஆகியோர் காதல், ஆக்ஷன், நகைச்சுவை என ரசிகர்களை பரவசப்படுத்தக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதுமட்டுமில்லாமல் இந்த தீபாவளியில் பாலிவூட் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் , பாலிஒன் எச்டி ( Bollyone HD) (அலைவரிசையில் 251) திரைக்கு வந்து சில மாதங்களே ஆன அமிதாப் பச்சன் மற்றும் தனுஷ் நடிப்பில் ‘ ஷமிதாப்’, மாதவன் கங்கனா ரானாவுட் இணையில் ‘ தானு வெட்ஸ் மனு ரிடன்ஸ்’, அதிரடி திரைப்படமான ‘ பட்லபூர்’, அனுஷ்கா சர்மா நடிப்பில் ‘NH10′ மற்றும் ‘பீவகூஃபியான்’  ஒளிபரப்பாகவுள்ளது.

மேலும் தீபாவளி போனஸாக அனைத்துலக இந்தியன் பிலிம் அகாடமி விருதுகள் 2015 (International Indian Film Academy (IIFA) Awards 2015) நிகழ்ச்சியினை தன்னுடைய ரசிகர்களுக்கு வழங்க காத்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் அனைவரும் எதிர்ப்பார்த்து  காத்துக் கொண்டிருக்கும் இந்த விருது நிகழ்வினை அர்ஜூன் கபூர் மற்றும் ரன்வீர் சிங் இணைந்து படைக்க ஹிருத்திக் ரோஷன், ஷாஹிட் கபூர் என பாலிவூட்டின் பல பிரபலங்களின் கண்கவர் படைப்பினை காணத் தவறாதீர்கள்.sakalakala-vallavan-445

#TamilSchoolmychoice

மேலும் நம்முடைய மண்ணின் மைந்தர்களின் திறமைகளை திரையிட்டுக் காட்ட அஸ்ட்ரோ வானவில்லில் (அலைவரிசை 201) தீபாவளி கொண்டாட்டம் ஒளிபரப்பாகவுள்ளது.

அதேவேளையில் அவர்களை உற்சாகப்படுத்திய அனைத்துலக வாணிப கண்காட்சி மற்றும் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்வு உங்கள் வீட்டையும் களைகட்டவுள்ளது. மேலும் இந்த வருடம் உங்கள் தீபாவளியின் விருந்தினராக வருகிறார் த்ரிஷா. தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட நடிகை த்ரிஷா, நரேஷ் ஐயர் மற்றும் நம்முடைய உள்ளூர் கலைஞர்கள் என ஒரு கலை பட்டாளமே உங்கள் நாளை மேலும் சந்தோஷப்படுத்தப் போகின்றனர்.

தொடர்ந்து ‘தமிழ்ப்பள்ளியில் தீபாவளி’ என தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் தீபாவளி சந்தோஷத்தை விளையாட்டு மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் அஸ்ட்ரோ வானவில் கொண்டாடப்போகின்றது. நம்முடைய உள்ளூர் தயாரிப்பான ‘அகிலேஸ்வரி’. ‘ விக்டரி’, ‘ அவனா நீ’, இந்த தீபாவளிக்கு பிரத்தியேகமாக ஒளியேறவிருக்கிறது.

Yennai-Arinthal-New-poster

அஸ்ட்ரோ வெள்ளித்திரை (அலைவரிசை 202) இடைவிடாமல் ரசிகர்களை உற்சாகப்படுத்த சிறந்த படவரிசையை தயார் செய்துள்ளது. விக்ரமின் பிரமாண்ட நடிப்பில் ‘ஐ’, அஜீத்குமாரின் அசத்தலான நடிப்பில் ‘என்னை அறிந்தால்’, மீண்டும் மீண்டும் ரசிகர்களை ரசிக்க வைக்கும் சிவகார்த்திகேயனின் ‘ காக்கி சட்டை’ போன்ற திரைப்படங்கள் இந்த தீபாவளியில் ஒளிபரப்பாகவுள்ளன.

இதுமட்டுமில்லாமல் சமூக வளைதங்களில் அஸ்ட்ரோ உலகம் (www.astroulagam.com.my) ரசிகர்களை தொடர்ந்து இணைக்கும் வகையில் பலவிதமான அங்கங்களை தீபாவளிக்காக மட்டும்  பிரத்தியேகமாக ஏற்பாடு செய்துள்ளது. குறிப்பாக அஸ்ட்ரோ உலகத்தின் முகநூல், டுவீட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) -இல் பிரபலாமாகும் சமூக வலைதள பயனீட்டாளர்களின் தீபாவளி டப்மேஸ் (dubmash) காணொளிகளை Red Button – இல் கண்டுகளிக்கும் சலுகைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது. #adalahidlithosai தொடர்பான தகவல்கள், புகைப்படங்கள், இன்ஸ்டாகிராமில் இந்த ஹேஸ்டேக் (hashtag) -ஐ பயன்படுத்தி அதிகம் விரும்பப்பட்ட புகைப்படங்கள், தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளின் பட்டியல், சமையல் குறிப்புகள் என அனைத்தும் இந்த சிவப்பு பொத்தான் (Red Button) – இல் காணக் கிடைக்கும்.

மேலும்  72 மணிநேரம் இடைவிடாது ரசிகர்களின் தீபாவளி வாழ்த்துகள், புகைப்படங்கள், குறுஞ்செய்திகளை ஒளிபரப்பவிருக்கும் சன் மியூசிக் சாட் ஸ்பேஸ் (Sun Music Chat space) -இன் சேவையைப் பெற அலைவரிசை 212 – குச் செல்லலாம்.

இந்த தீபாவளிக்கு நீங்கள் எங்கு சென்றாலும் உங்களின் அபிமான நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை ஆஸ்ட்ரோவில் கண்டு களியுங்கள். அஸ்ட்ரோ ஆன் த கோ (Astro on the Go – AOTG) – இல் நீங்கள் உங்களின் திறன்பேசி (smartphone) மற்றும் தட்டைக்கணினி (Tablet) வழியாக தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை கண்டு களிக்கும் புதிய சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு AOTG – இல் ஏற்கனவே கிடைக்கும் வானவில் மற்றும் ஜெயா டிவி அலைவரிசைகளுடன் புதிதாக விண்மீன் எச்டி மற்றும் ஸ்டார் விஜய் அலைவரிசைகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த AOTG  செயலியை பதிவிறக்கம் செய்து இப்பொழுதே கண்டுகளியுங்கள்.  மேல் விபரங்களுக்கு நீங்க செல்ல வேண்டிய அகப்பக்கம் www.astroonthego.com

தொடர்ந்து அஸ்ட்ரோ ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளில் கலந்துக் கொண்டு தீபாவளிக்கான பொருட்களை வாங்கினால் அங்கும் உங்களுக்கு ஒரு சிறப்பு சலுகை காத்துக் கொண்டிருக்கிறது. மேலும்  சூப்பர் பேக் 2-இன் சந்தாதாரர் ஆகினால் உங்களுக்கு சக்கரவர்த்தி பேக் அடுத்த 3 மாதத்திற்கு இலவசமாகக் கிடைப்பதுடன் மேலும் சூப்பர் பேக் 2- வும் 15 ரிங்கிட் வரையிலான கழிவில் கிடைக்கும்.

தீபாவளிக்காக மட்டுமே ஏற்பாடுத்திக் கொடுக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு சலுகையை பயன்படுத்திக் கொண்டு உங்கள் தீபாவளியை மேலும் உற்சாகமாகக் கொண்டாடுங்கள்!