Home இந்தியா டில்லி, பெங்களூர் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

டில்லி, பெங்களூர் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

884
0
SHARE
Ad

airport_2537592fபெங்களூர் – டில்லி மற்றும் பெங்களூர் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கேரளாவைச் சேர்ந்த கணினிப் பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

சனிக்கிழமையன்று அதிகாலையில் டில்லி மற்றும் பெங்களூர் விமான நிலையத்திற்குத் தொலை பேசி மூலம் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இரு விமான நிலையத்திற்கும் பேசியவர் ஒருவர் தான் என்பது தெரிந்தது.

வெடிகுண்டு  மிரட்டலைத் தொடர்ந்து டில்லி மற்றும் பெங்களூர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானங்களுக்குத் தகவல் கொடுத்து திரும்ப வரவழைத்துச் சோதனை செய்யப்பட்டு, வெடிகுண்டு எதும் இல்லை என உறுதியான பிறகே மீண்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

மேலும், விமான நிலையத்தில் அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதில் எந்த வெடிகுண்டும் சிக்க வில்லை. அது வெறும் புரளி என்பது தெரிந்தது.

இந்நிலையில், மிரட்டல் வந்த வாட்ஸ் அப் எண்ணை வைத்துக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு எச்ஆர்எஸ் லேஅவுட் பகுதியில் உள்ள ஜோஸ் என்பவரை மடக்கிப் பிடித்தனர்.

அவரிடம் விசாரித்ததில் அவருடைய முகவரி மற்றும் பெயரைப் பயன்படுத்தி அவருடைய நண்பர் கோகுல் என்பவர்தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பது தெரிய வந்தது. உடனே, ஜோஸ் மூலமாகக் கோகுலை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.

கோகுல் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதும், பெங்களூரில் கணினித்துறையில் பொறியாளராகப் பணியாற்றுகிறார் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

அவர் மிரட்டல் விடுத்தது ஏன்? அவருக்கும் தீவிரவாதக் குமபலுக்கும் தொடர்புள்ளதா எனக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.