Home இந்தியா இந்தியாவில் முதன்முறை: விமான வெடிகுண்டு மிரட்டலுக்கு ஆயுள் தண்டனை!

இந்தியாவில் முதன்முறை: விமான வெடிகுண்டு மிரட்டலுக்கு ஆயுள் தண்டனை!

595
0
SHARE
Ad

09-1441775658-gokul-bangalore-airport-hoax1பெங்களூர் – டில்லி மற்றும் பெங்களூர் விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குற்றத்திற்காகப் பெங்களூரில் பணியாற்றும் கேரளாவைச் சேர்ந்த கோகுல் கைது செய்யப்பட்டார்.

தனது முன்னாள் காதலியை அடைவதற்காகத் தனது மனைவியைக் கொலை செய்ததோடு, தனது காதலியின் கணவனைக் காவல்துறையில் சிக்க வைக்க, அவரது பெயர் மற்றும் முகவரியைப் பயன்படுத்தி சிம் கார்டு வாங்கித் திட்டமிட்டே வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

கோகுலின் மனைவியும் இறந்து போய் கோகுலும் கைதாகி சிறை சென்றுள்ள நிலையில் அவர்களது ஒரே பெண் குழந்தை அநாதையாக உள்ளது. அந்தக் குழந்தை தற்போது கோகுலின் முன்னாள் காதலியின் பராமரிப்பில் தான் உள்ளது.

#TamilSchoolmychoice

கோகுல் தனக்காகத் தான் இப்படிக் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளான்.அதனால் அவனது குழந்தையை என் குழந்தை போல வளர்க்கப் போகிறேன் என்று முன்னாள் காதலி உருக்கமாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில், கோகுல் மீது ஆயுள் தண்டனை விதிக்கப்படக் கூடிய ‘The Suppression of Unlawful Acts Against Safety of Civil Aviation (SUASCA) Act 1982’ என்ற சட்டப்பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சட்டத்தின் பிரிவு 3(1)(d)-ன்படி, அதிகபட்சமாக இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்க முடியும். இதுவரை இந்தியாவில் வெடிகுண்டு புரளி கிளப்பிய யார் மீதும் இந்தச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

முதல் முறையாக கோகுல் மீது தான் இந்தச் சட்டம் தற்போது தான் பிரயோகிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.