Home உலகம் சிரியா அகதிகளை ஏற்றுக் கொண்டது ஆஸ்திரேலியா- ஜெர்மனி!

சிரியா அகதிகளை ஏற்றுக் கொண்டது ஆஸ்திரேலியா- ஜெர்மனி!

581
0
SHARE
Ad

ffffffffமுனிச் – சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் சிரியா ராணுவத்திற்கும் இடையே நடக்கும் உள்நாட்டுப் போரால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி ஹங்கேரிக்குச் சென்றனர்.

ஹங்கேரியில் சாதகமான சூழ்நிலை இல்லாததால், அங்கிருந்து புறப்பட்டு  ஆஸ்திரியா, ஜெர்மனி போன்ற நாடுகளுக்குச் செல்ல விரும்பிய அவர்களை அந்த நாடுகள்
ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில், துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டின் மோஸ் தீவுக்கு அவர்கள் சென்ற போது படகு கவிழ்ந்து குழந்தைகள் உட்பட பலர் பலியானார்கள்.

#TamilSchoolmychoice

படகு விபத்தில் கடலில் மூழ்கி இறந்த ஐலான் என்ற பிஞ்சுக் குழந்தை துருக்கியில் கரை ஒதுங்கிக் கிடந்த அவலக் காட்சி ஊடகங்களில் பரவி,உலகையே உலுக்கியது.

அந்தக் குழந்தையின் பரிதாபகரமாக மரணத்திற்குப் பிறகு ஹங்கேரியில் தவித்துக்கொண்டிருந்த அகதிகளை ஏற்பதற்கு ஆஸ்திரியாவும், ஜெர்மனியும் முன்வந்துள்ளன.

அவ்விரு நாடுகளும் அகதிகளை ஏற்பதற்கு தங்கள் எல்லைகளைத் திறந்து விட்டுள்ளன.

இதன் மூலம் ஏறத்தாழ 8 ஆயிரம் அகதிகளை ஜெர்மனியும், 20 ஆயிரம் அகதிகளை ஆஸ்திரியாவும் ஏற்றுக் கொண்டுள்ளன.