Home உலகம் மியான்மரில் நேர்மையான தேர்தல் வேண்டும் – ஆங் சாங் சூகீ வலியுறுத்தல்!

மியான்மரில் நேர்மையான தேர்தல் வேண்டும் – ஆங் சாங் சூகீ வலியுறுத்தல்!

578
0
SHARE
Ad

Aung San Suu Kyiநைபிடாவ் – மியான்மர் எதிர்கட்சித் தலைவரான ஆங் சாங் சூகீ, வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி அங்கு நடைபெற இருக்கும் தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக தங்கள் நாட்டு மக்களுக்கு சூகீ விடுத்துள்ள செய்தியில், “மியான்மரை புரட்டிப் போடக் கூடிய மிகச் சரியான தருணம் இது தான். உலக நாடுகள், மியான்மர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க வேண்டும். பல வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக மக்கள் உண்மையான மாற்றத்தைக் கொண்டுவர காத்திருக்கின்றனர். இந்த வாய்ப்பை நாம் நழுவ விடக்கூடாது. எனவே, நேர்மையான, வெளிப்படையான தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடைசியாக 1990-ல், சூகீயின் என்டிஎல் கட்சி மியான்மர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. எனினும், அதற்குச் சில நாட்களுக்கு முன்னரே ஆங் சாங் சூகீ கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். சுமார் 21 வருட வீட்டுச் சிறைக்குப் பிறகு உலக நாடுகளின் வற்புறுத்தலால், கடந்த 2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.