Home இந்தியா அனைத்துலக முதலீட்டாளர்களுக்குச் சென்னை விமான நிலையத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பு!

அனைத்துலக முதலீட்டாளர்களுக்குச் சென்னை விமான நிலையத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பு!

589
0
SHARE
Ad

Chennai Airport(C)சென்னை – அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தரும் வெளிநாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர்களுக்குச் சென்னை விமான நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பும் அளிக்கப்படுகிறது.

அவர்களின் வருகையையொட்டி, வித விதமான விளம்பரப் பதாகைகள், சுற்றுலா பகுதிகளின் அழகிய படங்கள், சிற்பங்கள், ஓவியங்கள் போன்றவற்றால் விமான நிலையம் அழகு படுத்தப்பட்டுள்ளது.

சென்னை வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் நடைபெறும் அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க வெளிநாட்டிலிருந்து முதலீட்டாளர்கள் சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

#TamilSchoolmychoice

தமிழகத்திற்குப் பெருமளவில் முதலீட்டைக் கொண்டு வரும் மாநாடு இது என்பதால், இதில் பங்கேற்க வரும் தொழிலதிபர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் அவர்களை வரவேற்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அவர்களின் வசதிக்காகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உதாரணமாகக் குடியுரிமை, சுங்கம் போன்றவற்றின் சோதனைக்காக அவர்கள் வரிசையில் நிற்காமல், அதற்கான சிறப்பு கவுண்ட்டர்களில் உடனே சரிபார்த்துக் கொள்ளலாம்.

அதேபோல், அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட விடுதிகளுக்கு அழைத்துச் செல்ல, தனி கார்கள், தனி அலுவலர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.

எனவே அவர்கள் சிரமமின்றி விமான நிலையத்திலிருந்து தங்கும் இடத்திற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கும் செல்லலாம்.