Home Slider கொச்சின் நகரில் இன்று தொடங்குகிறது பிரவாசி மாநாடு: 200க்கும் மேற்பட்ட மலேசிய பேராளர்கள் பங்கு

கொச்சின் நகரில் இன்று தொடங்குகிறது பிரவாசி மாநாடு: 200க்கும் மேற்பட்ட மலேசிய பேராளர்கள் பங்கு

1026
0
SHARE
Ad

கொச்சின், ஜனவரி 7 – அரபிக் கடலோரம் வீற்றிருக்கும் அழகிய கேரள நகரான கொச்சினில் இன்று பாரதிய பிரவாசி மாநாடு கோலாகலமாக தொடங்குகின்றது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மாநாட்டை திறந்து வைத்து உரையாற்றுகின்றார்.

ஒவ்வொரு மாநிலமாக இடம் பெயரும் பிரவாசி மாநாடு கடந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் நகரில் நடந்தேறியது. இந்த ஆண்டு கொச்சின் நகரில் நடைபெறுகின்றது. கேரள மாநிலத்தில் இந்த மாநாடு இப்போதுதான் முதன் முறையாக நடத்தப்படுகின்றது.

மலேசியாவில் இருந்து ம.இ.கா சார்பாக இருநூற்றுக்கும் மேற்பட்ட பேராளர்களும், மற்ற இயக்கங்களிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட பேராளர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய  நாளான 9 ஜனவரி 1915ஆம் தேதியை நினைவு கூரும் வகையிலும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு கௌரவம் வழங்கும் வகையிலும், ஆண்டு தோறும் ஜனவரி 9ஆம் தேதி வாக்கில் பாரதிய பிரவாசி மாநாடு நடத்தப்படுகின்றது.