Home Featured வணிகம் மலேசியா ஏர்லைன்சிற்கு இது வாழ்வா?சாவா? போராட்டம் – பொருளாதார நிபுணர் கருத்து!

மலேசியா ஏர்லைன்சிற்கு இது வாழ்வா?சாவா? போராட்டம் – பொருளாதார நிபுணர் கருத்து!

838
0
SHARE
Ad

MASகோலாலம்பூர் – நாட்டின் தேசிய விமானப் போக்குவரத்து நிறுவனமான மலேசியா ஏர்லைன்சிற்கு, தற்போது வாழ்வா?சாவா? என்ற போராட்டம் தொடங்கி உள்ளதாக பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த மாற்றத்தை சந்தித்துள்ள மலேசியா ஏர்லைன்சிற்கு, உள்நாட்டிலும், பிற கண்டங்களிலும் கடும் போட்டி காத்திருக்கிறது. இதில் சிறந்த நிறுவனம் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற சூழல் நிலவி வரும் நிலையில், நிர்வாகத்திலும் அதிரடி மாற்றங்களை சந்தித்துள்ள மாஸ், இந்த போட்டியில் தாக்கு பிடிக்கும் என்று பொருளாதார நிபுணர் அகமட் சகி அகமட் ஷரீஃப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அகமட் சகி கூறியிருப்பதாவது:-

#TamilSchoolmychoice

“மாப் (Malaysia Airlines Bhd) நிறுவனத்தை புதிய தலைமைச் செயல் அதிகாரி, உலக தரத்திற்கு கொண்டு சென்று வருகிறார். அவரின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நம்பிக்கை தருபவையாக உள்ளன. கடந்த ஒருவருட காலமாக கசானா நிறுவனம், மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளும் ஆக்கப்பூர்வமாக உள்ளன. இனி, நிறுவனத்தின் வெற்றி ஒட்டுமொத்தமாக ஊழியர்களின் கைகளில் தான் உள்ளது.”

“மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால், ப்ராஹிம்ஸ் ஏர்லைன் mullerகேட்டரிங் செண்ரியான் பெர்ஹாட்டுடன் (Brahim’s Airline Catering Sdn Bhd) ஒப்பந்தம் மேற்கொண்டது. வருவாய் இல்லாத இடங்களுக்கு விமானப்  போக்குவரத்தை குறைத்துக் கொண்டது போன்றவை சிறந்த நடவடிக்கைகளாக பார்க்கப்படுகின்றன. இத்தகைய நடவடிக்கைகள், கிறிஸ்டோப் முல்லரின்(படம்) சிறந்த நிர்வாகத் திறனை காட்டுகிறது.”

“13,000 தொழிலாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு, நிறுவனத்தை செயல்படுத்த துவங்கி உள்ளது, செயல்பாட்டு செலவை பாதியாகக் குறைக்கும். செப்டம்பர் 1-ம் தேதி, தொடக்க விழாவின் போது, தங்கள் பயணிகளை, முல்லர் மற்றும் அவரது குழுவினர் நேரே சென்று வாழ்த்து கூறியதன் மூலம், சேவை சார்ந்த வர்த்தகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அவரின் எண்ணம் தெளிவாகிறது.”

“எனினும், தற்போதய பொருளாதார சூழல் மலேசிய ஏர்லைன்சிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட் வீழ்ச்சி, பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம். ஆனால், இதையெல்லாம் தாண்டி தான், மாப் ஜெயித்தாக வேண்டிய கட்டாய ஏற்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.