Home Featured நாடு செப் 16 பேரணி: பாடாங் மெர்போக்கில் நடத்த டிபிகேஎல் அனுமதி!

செப் 16 பேரணி: பாடாங் மெர்போக்கில் நடத்த டிபிகேஎல் அனுமதி!

659
0
SHARE
Ad

Redshirtகோலாலம்பூர் – செப்டம்பர் 16 தேதி பேரணிக்கு கோலாலம்பூர் மாநகர சபை (டிபிகேஎல்) அனுமதி வழங்கியுள்ளது. என்றாலும் அப்பேரணி பாடாங் மெர்போக்கில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளது.

“Himpunan Rakyat Bersatu – ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு’ என்று அழைக்கப்படும் அப்பேரணி ஒருங்கிணைப்பாளர்கள் பாடாங் மெர்போக்கைப் பயன்படுத்த அனுமதி கோரினார். நாங்கள் அதற்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளோம்” என்று கோலாலம்பூர் மேயர் டத்தோ முகமட் அமின் நோர்டின் அப்துல் அசிஸ் கூறியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெற்ற பெர்சே 4 பேரணி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் பேரணி நடத்த பாடாங் மெர்போக் தான் பரிந்துரைக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice