Home இந்தியா இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே- இந்தியப் பிரதமர் மோடி இன்று மதியம் சந்திப்பு!

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே- இந்தியப் பிரதமர் மோடி இன்று மதியம் சந்திப்பு!

732
0
SHARE
Ad

ranil modiபுதுடில்லி – ரணில் விக்கிரமசிங்கே இலங்கைப் பிரதமராக மீண்டும் பதவியேற்ற பின்னர் முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் 16 பேர் கொண்ட இலங்கை அரசின் உயர்நிலைக் குழுவினரும் வந்துள்ளனர். அவர்களை டில்லி விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வரவேற்றார்.

இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாக இன்று மதியம் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துப் பேசுகிறார்.

இச்சந்திப்பின் போது தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்தும், இலங்கையின் போர்க்குற்ற விவகாரத்தில் அனைத்துலக விசாரணை குறித்தும் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்தச் சந்திப்பிற்குப் பின்னர், இருவரும் கூட்டாக டில்லியில் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளனர்.