Home இந்தியா தேமுதிக-வைக் கலைத்து விட்டு அதிமுக-வில் இணையத் தயார்: விஜயகாந்த்!

தேமுதிக-வைக் கலைத்து விட்டு அதிமுக-வில் இணையத் தயார்: விஜயகாந்த்!

513
0
SHARE
Ad

Vijayakanth-e1305809463494-659x401கோயம்புத்தூர் – தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா நல்லது செய்தால், தேமுதிக-வைக் கலைத்துவிட்டு, அதிமுக-வில் இணையத் தயாராக இருப்பதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தேமுதிக 11-ஆம் ஆண்டு தொடக்கவிழா, விஜயகாந்தின் பிறந்தநாளான வறுமை ஒழிப்பு தினவிழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா பொதுக் கூட்டம் கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இம்முப்பெரும் விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏழை எளிய மக்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

#TamilSchoolmychoice

அப்போது அவர் பேசியதாவது:

“இந்த நாள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள். தேமுதிக தொடங்கி 10 ஆண்டுகள் முடிந்து,இன்று முதல் 11-ஆம் ஆண்டு தொடங்குகிறது. எனவே என்னைப் போல் அனைத்துத் தொண்டர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

நான் எங்கு சென்றாலும் பத்திரிகையாளர்கள் என்னிடம் யாரிடம் கூட்டணி என்றுதான் கேட்கிறார்கள். மக்களை நம்பித்தான் நான் இருக்கிறேன். மக்களிடமும், தெய்வத்துடனும்தான் கூட்டணி. வேறு யாரிடமும் கூட்டணி இல்லை.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்று ஆண்டுக்கு பிறகு உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி, அதில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடு கிடைத்து உள்ளதாகக் கூறி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்.

தமிழக மக்கள் தற்போது தெளிவாக இருக்கிறார்கள். அவர்களிடம் இதுபோன்ற பொய்யான தகவல்களைக் கூறி, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று கனவு காண வேண்டாம்.

தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் கட்சிப் பாகுபாடின்றி, தமிழக முதலமைச்சரான ஜெயலலிதா நல்லது செய்தால், நான் எனது கட்சியைக் கலைத்துவிட்டு, அதிமுக-வில் இணையத் தயாராக இருக்கிறேன். ஆனால், ஜெயலலிதா செய்ய மாட்டார்” என்று பேசினார்.