Home இந்தியா “எருமை மாட்டில் மழை பெய்தது போல் இருக்கிறார் ஜெயலலிதா” மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் ஈவிகேஎஸ்!

“எருமை மாட்டில் மழை பெய்தது போல் இருக்கிறார் ஜெயலலிதா” மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் ஈவிகேஎஸ்!

593
0
SHARE
Ad

evksதிருச்சி – பிரதமர் மோடி-ஜெயலலிதா சந்திப்பைக் கொச்சையாகப் பேசினார் என்று தமிழகக் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனைக் கடுமையாக எதிர்த்து அதிமுக-வினர் கணடனப் போராட்டங்களை நடத்தி வந்தனர்.போராட்டத்தைக் கை விடுங்கள் என்று ஜெயலலிதா கேட்டுக் கொண்டதன் பிறகே போராட்டம் ஒரு வழியாய் ஓய்ந்தது.

ஆனால், மீண்டும் ஈவிகேஎஸ் இளங்கோவன், ஜெயலலிதாவைப் பற்றி வாய்த் துடுக்காய்ப் பேசி மற்றொரு சர்ச்சை கிளம்ப கொளுத்திப் போட்டுள்ளார்.

திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் புதன்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான தியாகி அருணாச்சலம் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

#TamilSchoolmychoice

அப்போது அவர் பேசியதாவது: “காவிரி பிரச்னை ஆரம்பிக்கும் போதெல்லாம் கர்நாடக முதல்வர் அம்மாநில அனைத்துக் கட்சியினரையும் ஒருங்கிணைத்து டில்லிக்குச் சென்று பிரதமரையோ, சம்பந்தப்பட்ட அமைச்சரையோ சந்திக்கிறார். ஆனால், ஜெயலலிதா இங்கிருந்து கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்.

விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்துவிட்ட காலத்தில் இருந்து கொண்டு இன்னமும் கடிதம் எழுதினோம் என்பது எந்தளவுக்குச் சாத்தியம்? முதல்வர் ஜெயலலிதா உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி அனைத்துக் கட்சி பிரநிதிகளுடன் பிரதமரை சந்திக்க முயற்சி செய்ய வேண்டும்.

தமிழக அரசு முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி அதில் 2 லட்சம் கோடி முதலீடு வந்ததாக தம்பட்டம் அடிக்கிறார்கள். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழகத்தை விட சிறிய மாநிலமான ஜார்க்கண்டில் நடந்த மாநாட்டில் 1.50 லட்சம் கோடி முதலீடு வந்துள்ளது.

அதேபோல் குஜராத்தில் 7 லட்சம் கோடி, ராஜஸ்தானில் 9 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதை ஒப்பிட்டால் தமிழகத்தில் முதலீடு குறைவு என்பது தெரியும்.

அதிலும் அந்த மாநாட்டில் வெளிநாட்டில் இருந்து கலந்து கொண்ட முதலீட்டாளர் மூன்று பேர் மட்டுமே. மற்றவர்கள் இந்திய நிறுவனங்கள்.அதிலும் டாடா, அதானி உள்ளிட்ட உள்நாட்டு பிரபலங்கள் கலந்து கொள்ளவில்லை. அமைச்சர்கள், முதலீடு செய்ய வருபவர்களிடம் முதலீட்டில் கால்வாசியை முதலிலேயே லஞ்சமாகக் கேட்பதால் தொழிலதிபர்கள் தமிழகத்தில் முதலீடு செய்யப் பயப்படுகிறார்கள்.

மின் தட்டுப்பாட்டு, மின் வெட்டு இல்லை என வாய்ப்பேச்சில் சொல்லாமல் சரி செய்தால் தமிழகத்தில் முதலீடுகள் அதிகரிக்கும்.

அரசு பேருந்தில் இருந்த ஓட்டையில் பெண் விழுந்து விட்டதாக செய்தி வந்திருக்கிறது. முன்பெல்லாம் குழந்தைகள் விழுந்தார்கள் என சொன்னார்கள். ஆனால், இப்போது பெரியவர்கள், பெண்கள் விழும் அளவுக்கு அரசு பேருந்துகள் ஓட்டையாகிவிட்டது. அந்தளவுக்குப் போக்குவரத்துத்துறை இருக்கிறது.

இவ்வளவு நடந்தும் முதல்வரின் செயல்பாடுகள் தொடர்ந்துஎருமை மாட்டு மேல மழை பெய்தால் எப்படி இருக்குமோ அதுபோலத்தான் இருக்கிறது” என்று பேசியுள்ளார்.

இதனால் மீண்டும் அதிமுக-வினர் போராட்டக் களத்தில் குதித்து விடுவார்களோ என்கிற பதற்றம் உருவாகியுள்ளது.