Home இந்தியா மதிமுகவின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் மொத்தமாக திமுகவில் இணைந்தனர்!

மதிமுகவின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் மொத்தமாக திமுகவில் இணைந்தனர்!

615
0
SHARE
Ad

dmkசென்னை – மதிமுக-வில் நிலவும் உட்கட்சிப் பூசல் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே, காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக செயலாளர் பாலவாக்கம் சோமு, அக்கட்சியிலிருந்து விலகி திமுக-வில் இணைந்த நிலையில், இன்று சேலம் மாவட்ட மதிமுக செயலாளராக இருந்த தாமரைக்கண்ணன், தனது ஆதரவாளர்கள் மற்றும் சேலம் மாவட்ட மதிமுக நிர்வாகிகளுடன் இன்று திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.

வைகோ எதையும் தன்னிச்சையாக முடிவு எடுப்பதாகவும், நிர்வாகிகளை கலந்து ஆலோசிப்பதில்லை என்றும், அதனால் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டதாகவும் தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை கருணாநிதி, முக்கிய முடிவுகள் அனைத்தும் தாமரைக்கண்ணனுடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து இருப்பாரோ?