Home இந்தியா நிம்மதியை தேடி வருகிறார்கள் – மதிமுகவினர் வருகை குறித்து ஸ்டாலின் விளக்கம்!

நிம்மதியை தேடி வருகிறார்கள் – மதிமுகவினர் வருகை குறித்து ஸ்டாலின் விளக்கம்!

594
0
SHARE
Ad

stalinசென்னை – மதிமுக-வை உடைக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை. உடைக்க நினைத்து இருந்தால் எப்போதோ  உடைத்திருப்போம் என திமுக பொருளாளர் ஸ்டாலின் மதிமுகவினர், திமுகவில் இணைவது குறித்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று மாலை சென்னையில், சுமார் 2000 பேர் பல்வேறு கட்சிகளில் இருந்து திமுகவில் இணைந்தனர். அந்த இணைப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

“நாங்கள் அந்த கட்சியை (மதிமுக) உடைக்கும் முயற்சியில் இருப்பதாக கூறுகிறார்கள். நாங்கள் உடைக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் எப்போதோ உடைத்திருப்போம். ஆனால், அவர்கள் தானாக விரும்பி நிம்மதியை தேடி இங்கு வருகிறார்கள்.”

#TamilSchoolmychoice

“இன்று, நீங்கள்(கட்சியில் இணைய வந்தவர்கள்) மட்டுமின்றி நாங்களும் முழு நிம்மதியை பெற்றுள்ளோம். இன்று திமுக ஆட்சியிலோ, எதிர் கட்சியாகவோ இல்லாத நிலையிலும், கருணாநிதியை நம்பி பிற கட்சிகளை சேர்ந்த நீங்களெல்லாம் வந்துள்ளீர்கள். ஏப்ரல் மாதம் 2016 சட்டமன்ற தேர்தலில் நமது உணர்வை வெளிப்படுத்த வேண்டும்.”

“மக்களிடம் இந்த உணர்வை பெறுவதற்கான பொறுப்பை நீங்கள் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் தான் உங்கள் உற்றார், உறவினர்கள் மற்றும் உங்களை சுற்றி உள்ளவர்களிடம் பிரசார பீரங்கிகளாக மாறி திமுக-விற்காக பிரச்சாரம் செய்ய வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.