Home கலை உலகம் மதுரையில் சிவகார்த்திகேயன் தாக்கப்பட்ட விவகாரம்: ரஜினி தொலைபேசியில் ஆறுதல்!

மதுரையில் சிவகார்த்திகேயன் தாக்கப்பட்ட விவகாரம்: ரஜினி தொலைபேசியில் ஆறுதல்!

716
0
SHARE
Ad

siva13-600x300மதுரை- மதுரை விமான நிலையத்தில் கமல் ரசிகர்களால் சிவகார்த்திகேயன் தாக்கப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்ட ரஜினிகாந்த், பதறிப்போய் சிவகார்த்திகேயனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திருச்செந்தூர் ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் நடந்த சிவந்தி ஆதித்தனார் சிலைத் திறப்பு நிகழ்ச்சியில் கமலுடன் பங்கேற்ற சிவகார்த்திகேயன், நிகழ்ச்சி முடிந்து மதுரைக்குத் திரும்பி வந்த போது விமான நிலையத்தில் திடீரென அவரைச் சூழ்ந்து கொண்டு ஒரு கும்பல் தாக்கத் தொடங்கியது.

பின்னர் காவலர்கள் ஓடி வந்து அந்தக் கும்பலில் இருந்து சிவகார்த்திகேயனை மீட்டுப் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

#TamilSchoolmychoice

இச்சம்பவத்தின் காணொளி சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், சிவகார்த்திகேயன் தன்னை யாரும் தாக்கவில்லை என்று மறுத்தார். கமலோ, சிவாவைத் தாக்கியது என்னுடைய ரசிகர்கள் அல்ல என்றார்.

எதுவாக இருந்தாலும் இது அத்துமீறிய செயல் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இந்தச் சம்பவம் பற்றி உன்னிப்பாகக் கேட்டறிந்த ரஜினி, உடனே சிவாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார். ரஜினி விசாரித்ததில் மனம் உருகிவிட்டார் சிவா.

மேலும் அவர், “கவனமா இருங்க. பொது இடங்களுக்குப் போவதை குறைச்சுக்குங்க” என்று அறிவுரை வழங்கினாராம்.