Home இந்தியா இந்திய கிரிக்கெட் சங்கத்தின் அடுத்த தலைவர் யார்? முக்கியப் புள்ளிகள் கடும் போட்டி!

இந்திய கிரிக்கெட் சங்கத்தின் அடுத்த தலைவர் யார்? முக்கியப் புள்ளிகள் கடும் போட்டி!

630
0
SHARE
Ad

bcciகொல்கத்தா- ஜக்மோகன் டால்மியாவின் மரணத்தைத் தொடர்ந்து இந்தியக் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவிக்குக் கடும் போட்டி உருவாகியுள்ளது.

இந்தியக் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவி மிகவும் செல்வாக்கு நிறைந்தது. ஆகவே அதனைக் கைப்பற்றுவதில் முக்கிய கிரிக்கெட் புள்ளிகளுக்குள் பலத்த போட்டி உருவாகியுள்ளது.

கிரிக்கெட் வாரிய துணைத்தலைவர் கவுதம்ராய், கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாக்கூர், ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா, முன்னாள் தலைவர் சரத்பவார்  உள்பட பலர் இதற்கான போட்டியில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

ஐசிசி சேர்மனும் முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைவருமான என்.சீனிவாசன் இதில் நேரடியாகப் போட்டியில் இல்லாவிட்டாலும், அவரது ஆதரவாளர் யாரையாவது போட்டியில் பங்கேற்கச் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், கிரிக்கெட் வாரியச் செயலாளருமான அனுராக் தாக்கூர் பலம் வாய்ந்தவராகக் கருதப்படுகிறார்.

அவருக்கு அடுத்துத் தற்போது இடைக்காலத் தலைவராகவும் கிழக்கு மண்டலத் துணைத் தலைவராக இருக்கும் கவுதம்ராய்க்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் இப்பதவியைக் கைப்பற்ற மும்முரமாக ஆரதவு திரட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், இது குறித்து ஐ.பி.எல் சேர்மன் ராஜீவ் சுக்லா, “டால்மியாவின் திறமைக்கும், அவரது தகுதிக்கும் இணையாக வேறு யாரையும் ஒப்பிட முடியாது. அவரது இடத்தை நிரப்புவது மிகவும் கடினமானதாகும். அடுத்து என்ன செய்வது? என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய கூட்டத்தைக் கூட்டி முடிவு செய்வோம்.” எனக் கூறியுள்ளார்.