சிங்கப்பூர் – சிங்கப்பூர் மக்களைப் பற்றி அவதூறான கருத்துக்களை முகநூலில் வெளியிட்ட பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த செவிலி ஒருவருக்குச் சிங்கப்பூர் சிறப்பு நீதிமன்றம் 4 மாத காலச் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த எலோ எட் முண்ட்சல் பெலோ என்பவர் சிங்கப்பூரில் செவிலியராகப்( நர்ஸாகப்) பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் அவர் தனது முகநூல் பக்கத்தில் “சிங்கப்பூர் குடிமக்கள் தோற்றுவிட்டவர்கள்” என்று எழுதியிருந்தார். இது பகிரப்பட்டுப் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.
அவர்மீது தேசத்துக்கு எதிராகச் செயல்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சமூக ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கும்கருத்துக்களைச் சிங்கப்பூர் நீதிமன்றம் அனுமதிக்காது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு சமூக மக்கள் வாழும் சிங்கப்பூரில் இத்தகைஅய் அக்ருத்துக்களைச் சமூக ஊடகங்களில் பரப்புவது வருந்தத் தக்கது எனச் சிங்கப்பூர் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.