Home இந்தியா நமக்கு நாமே பிரசாரப் பயணம்: மு.க.ஸ்டாலின் மதுரைக்குள் நுழையத் தடை!

நமக்கு நாமே பிரசாரப் பயணம்: மு.க.ஸ்டாலின் மதுரைக்குள் நுழையத் தடை!

622
0
SHARE
Ad

1442864806-0485மதுரை- திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ‘நமக்கு நாமே’ பிரசாரப் பயணத்தை நேற்று கன்னியாகுமரியில் தொடங்கி இன்று திருநெல்வேலியில் தொடர்ந்து வருகிறார்.

அவரது இந்தப் பிரசாரப் பயணத்திற்குக் கட்சிக்காரர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதைத் தொடர்ந்து அவர் வரும் 26 -ம் தேதி மதுரையில் ‘நமக்கு நாமே…விடியலை நோக்கி’ எனும் பொருளில் நடைப் பயணப் பிரசாரத்தை மேற்கொள்வதாக அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதுதொடர்பாக மதுரை மாநகராட்சி வளாகத்தில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மேயர் வி.ராஜன்செல்லப்பா தலைமையில் அவசரமாகக் கூடியது.இக்கூட்டத்தில் அனைத்து அதிமுக மாமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

ஏற்கனவே மதுரை போக்குவரத்து நெரிசலால் திண்டாடி வருகிறதென்றும், அதிலும் மு.க.ஸ்டாலினின் பிரசாரப் பயணத்திற்கு அனுமதியளித்தால் மிகப் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும், ஆகையால் மு.க.ஸ்டாலினின் பிரசாரப் பயணத்திற்கு மாவட்ட ஆட்சியர், ஊரகக் காவல் கண்காணிப்பாளர், மாநகர காவல் ஆணையர் ஆகியோர் அனுமதியளிக்கக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.