மும்பை – மும்பையில் கடந்த 2006–ஆம் ஆண்டு ஜூலை 11–ஆம் தேதி தீவிரவாதிகள் ஒரே சமயத்தில் 7 மின்சார ரயில்களில் குண்டு வைத்துத் தாக்குதல் நடத்தினர். இந்தப் பயங்கர சம்பவத்தில் 188 அப்பாவி பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும் 829 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்தப் பயங்கரவாத்தில் தொடர்புடைய 12 பேரைக் குற்றவாளிகள் என உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது மும்பை ‘மோக்கா’ சிறப்பு நீதிமன்றம்.
இதைத் தொடர்ந்து குற்றவாளிகளுக்குத் தண்டனை விதிப்பது குறித்த விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக நடைபெற்றது.
12 குற்றவாளிகளில் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் முறையிட்டார். அவர்களுக்கான தண்டனை விவரம் சென்ற வாரமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால்,பல்வேறு காரணங்களால் இறுதித் தீர்ப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில்,அவர்களுக்கான தண்டனை விவரம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வழங்கப்படும் என்று மும்பை நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.