Home கலை உலகம் இன்று சரத்குமார் -ராதிகா மகள் ரேயானின் திருமண நிச்சயதார்த்தம்: ஜெயலலிதா வாழ்த்து!

இன்று சரத்குமார் -ராதிகா மகள் ரேயானின் திருமண நிச்சயதார்த்தம்: ஜெயலலிதா வாழ்த்து!

812
0
SHARE
Ad

23-1442992917-reyan-engagement-600சென்னை: சரத்குமார் – ராதிகா தம்பதியரின் மகள் ரேயானுக்கும் கிரிக்கெட் வீரர்அபிமன்யு முகுந்துக்கும் திருமண நிச்சயதார்த்தம் இன்று சென்னையில் நடைபெற்றது.மணமக்கள் இருவருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளையும் ஆசிகளையும் கூறியுள்ளார்.

திருமண நிச்சயதார்த்தத்தில் திரையுலகப் பிரமுகர்கள் பெரும்பாலானோர் திரண்டு வந்து வாழ்த்தினர்.

இத்திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருந்தார்.

#TamilSchoolmychoice

“தங்களது மகள் திருவளர்ச் செல்வி ரேயான் திருமண நிச்சயதார்த்த விழாவிற்கு வருகை தருமாறு என்னை நேரில் வந்து அழைத்தமைக்கு என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களது மகளின் திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டு, நேரில் வாழ்த்த விரும்பியபோதிலும், எனது அலுவல் பணிகள் காரணமாக நேரில் வர இயலவில்லை.

இல்லற வாழ்வில் இணைய உள்ள திருவளர்ச் செல்வி ரேயான்- திருவளர் செல்வன் மிதுன் இருவருக்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அக்கடிதத்தில் வாழ்த்தியிருந்தார்.