Home இந்தியா இனி காசோலை திரும்பி வந்தால் உடனடியாக வழக்கு: அவசரச் சட்டம் பிறப்பிப்பு!

இனி காசோலை திரும்பி வந்தால் உடனடியாக வழக்கு: அவசரச் சட்டம் பிறப்பிப்பு!

621
0
SHARE
Ad

Evening-Tamil-News-Paper_79149591923புதுடில்லி – வங்கியில் பணமின்றிக் காசோலை திரும்பி வந்தால், இனி உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்படும்.இதற்கு ஏதுவாக மாற்றுமுறை ஆவணச் சட்டம் 2015-ன் கீழ் அவசரச் சட்டம் ஒன்றைக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார்.

கடந்த மூன்று மாதத்திற்குள் இது தொடர்பாகக் குடியரசுத்தலைவர் பிறப்பிக்கும் இரண்டாவது உத்தரவு இதுவாகும். இதற்கு முன்னதாக கடந்த ஜூன் 15-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதன் மூலம் காசோலை வழங்கியவர் இருக்கும் பகுதியில் வழக்கு தொடர்வதற்குப் பதிலாக, அதை பெறுபவர் வசிக்கும் பகுதியிலேயே வழக்கு தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

காசோலை திரும்பி வருவதால் நாடு முழுவதும் 18 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, வெவ்வேறு பகுதிகளில் உள்ள நீதிமன்றத்துக்கு அலைந்து திரிவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்படவர்களுக்கு நேர விரயம், பண விரயம் ஆகிய இரண்டையும் தவிர்க் கும் வகையில் இந்த அவசரச் சட்டம் அமைந்துள்ளது

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறாத காரணத்தால், இப்போதைய சூழலில் இந்த அவசரச் சட்டம் அவசியமானது என்று கருதியே குடியரசுத் தலைவர் இதைப் பிறப்பித்துள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

.