Home Featured தமிழ் நாடு இணையவாசிகளால் கேலிக் கூத்தாக்கப்படும் ஸ்டாலினின் ‘நமக்கு நாமே’ பிரச்சாரம்!

இணையவாசிகளால் கேலிக் கூத்தாக்கப்படும் ஸ்டாலினின் ‘நமக்கு நாமே’ பிரச்சாரம்!

935
0
SHARE
Ad

stalin6சென்னை – 2016 சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, ‘நமக்கு நாமே’ என்ற பிரச்சாரப் பயணத்தை துவக்கிய திமுக பொருளாளர் ஸ்டாலின், தொடர்ந்து மக்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். பொதுவாக இந்தியாவில் தேர்தல் பிரச்சாரப் பயணங்களின் போது தலைவர்கள் வாகனங்களில் இருந்தபடியே பொதுமக்களிடம் உரையாற்றுவார்.

இதனை முற்றிலும் மாற்றி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, நேரடியாக மக்களின் இல்லங்களுக்கே செல்வது, அவர்கள் வீட்டு திண்ணைகளில் உறங்குவது, சாதாரண தேநீர் கடைகளில் தேநீர் அருந்துவது என தனது எளிமையை காட்டுவதற்காக பல்வேறு வழிமுறைகளை கையாண்டார்.

அதே வழிமுறைகளைத் தான் தற்போது ஸ்டாலினும் கடைப்பிடித்து வருகிறார். அவை எந்த அளவிற்கு கைகொடுக்கும் என்பதை  2016 சட்டசபைத் தேர்தல் தான் தீர்மானிக்கும். இதற்கிடையில், ஸ்டாலினின் பிரச்சார வழிமுறைகளை இணைய வாசிகள் மீமீக்களாக (கேலிப் புகைப்படங்கள்) வெளியிட்டு வருகின்றனர்.

#TamilSchoolmychoice

அது பற்றிய பார்வை பின்வருமாறு:

stalin2வடிவேலுவையும், ஸ்டாலினையும் ஒப்பிட்டு வெளியாகி உள்ள புகைப்படம்

stalin1கவுண்டமணியையும், ஸ்டாலினையும் இணைத்து வெளியான மீமீ

stalin5

stalin4

stalin3