Home Featured இந்தியா தொழில்நுட்ப ஜாம்பவான்களின் பார்வையில் மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம்!

தொழில்நுட்ப ஜாம்பவான்களின் பார்வையில் மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம்!

599
0
SHARE
Ad

nadellaசான் ஜோசே – அமெரிக்கா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்த உலக தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள், இந்தியாவில் மோடி அரசு செயல்படுத்தி வரும் கனவுத் திட்டமான ‘டிஜிட்டல் இந்தியா’ (Digital India) குறித்து சிலாகித்துக் கூறியுள்ளனர். அவர்களின் பார்வையில், இந்த திட்டம் தொழில்நுட்ப அளவில் இந்தியாவின் மதிப்பை பன்மடங்கு உயர்த்தும் என்று தெரியவருகிறது.

டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்து வல்லுனர்களின் கருத்துக்கள் பின்வருமாறு:

மைக்ரோசாப்ட் தலைவர் சத்யா நாதெல்லா

#TamilSchoolmychoice

டிஜிட்டல் இந்தியா குறித்த, பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை மிகவும் சரியானது. சரியான வழியில் கொள்கைகளை புகுத்தி வருகிறார். கிராமங்களையும் இணையத்தின் வழியாக இணைக்க அவர் முயற்சி செய்து வருகிறார். இந்த திட்டத்தில், மைக்ரோசாப்ட் பெரிய அளவில் அங்கம் வகிக்கும்.

கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை

பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் பார்வையை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம். இந்தியாவை முன்னேற்றுவதில் அவர் உறுதியாக இருக்கிறார். புதிய கண்டுபிடிப்புகளின் மையமாக இந்தியாவை உருவாக்க அவர் உத்வேகமாக செயல்பட்டு வருகிறார். தொழில்நுட்பத்தை பொருத்தவரை இந்தியா வெகுவாக முன்னேறி வருகிறது. தொழில்நுட்பங்கள் மூலம் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

சிஸ்கோ தலைவர் ஜான் சாம்பெர்ஸ்

மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம், தொழில்நுட்ப பிளவுகளை சரி செய்யும். மோடி உலகளாவிய பார்வையை கொண்டுள்ளார். அவர், இந்தியா மற்றும் உலகை மாற்றுவார் என்று நம்புகிறோம்.