Home Featured நாடு மோசமாகும் புகைமூட்டம் – நாளை பள்ளிகள் மூடப்படுகின்றன!

மோசமாகும் புகைமூட்டம் – நாளை பள்ளிகள் மூடப்படுகின்றன!

539
0
SHARE
Ad

Haze-Kuala Lumpur-27 sep 2015கோலாலம்பூர் – நாட்டின் பல பகுதிகளில் புகைமூட்டம் மோசமான, அபாயகரமான கட்டத்தை எட்டியதைத் தொடர்ந்து நாளை பள்ளிகள் மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான் ஆகிய வட்டாரங்களில் உள்ள பள்ளிகளும், சரவாக்கின் பல பகுதிகளில் உள்ள பள்ளிகளும் நாளை மூடப்படும்.

இந்தோனேசியாவில் பொது இடங்களில் எரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட காரணத்தால் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் புகை மூட்ட நிலைமை மோசமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

நேற்று சுபாங் விமான நிலையத்தின் விமான சேவைகள் புகை மூட்டம் காரணமாக தடைப்பட்டன.

மேலும் ஜோகூர்பாரு விமான நிலையத்தின் விமான சேவைகளும் புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டன.

கோலாலம்பூரின் வான்வெளியை புகைமூட்டம் மோசமான நிலையில் சூழ்ந்திருக்கும் காட்சியை இன்று எடுக்கப்பட்ட மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.