Home Featured நாடு கெவின் மொராயிஸ் கொலை: இராணுவ மருத்துவர் உட்பட 8 பேர் நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்!

கெவின் மொராயிஸ் கொலை: இராணுவ மருத்துவர் உட்பட 8 பேர் நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்!

780
0
SHARE
Ad

Kevin Moraisகோலாலம்பூர் – கெவின் மொராயிஸ் படுகொலை தொடர்பில் நாளை ஜாலான் டூத்தாவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஏழு பேர் குற்றம் சாட்டப்படவுள்ளனர். அவர்களுள் இராணுவ மருத்துவரும் ஒருவராவார்.

5 பேர் மீது மலேசியக் குற்றவியல் பிரிவு 302இன் கீழ் கொலைக் குற்றம் சாட்டப்படும். மற்ற இருவர் மீது கொலைக்கு உடந்தையாக இருந்ததற்காக குற்றம் சாட்டப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் எழுவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படலாம். குற்றவியல் சட்டங்களின்படி, கொலைக்கான தண்டனையும், கொலைக்கு உடந்தையாக இருந்ததற்கான தண்டனையும் ஒரே மாதிரிதான் வழங்கப்படும்.

#TamilSchoolmychoice

எட்டாவது நபர் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலைக்கு உடந்தையாக இருந்ததற்காக குற்றம் சாட்டப்படுவார் எனத் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நாளை குற்றம் சாட்டப்படவிருக்கும் இராணுவ மருத்துவர்,  ஒரு குற்றச்சாட்டின் காரணமாக தற்போது ஒரு இலட்சம் ரிங்கிட் பிணையில் (ஜாமீன்) இருந்து வருகின்றார். மருத்துவப் பொருட்களை விநியோகம் செய்வதற்காக, மூன்று நிறுவனங்களுக்கு தகாத முறையில் சிபாரிசு செய்த காரணத்தால், 7 இலட்சம் ரிங்கிட் கையூட்டு பெற்ற வழக்கொன்றில் கைது செய்யப்பட்டு, விசாரணையை அவர் எதிர்நோக்கி வருகின்றார்.

இதற்கிடையில் கெவின் மொராயிசின் சடலத்தை அவரது குடும்பத்தினர் இதுவரை கோரவில்லை. அவருக்கு நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனை குறித்து அவரது குடும்பத்தினர் அதிருப்தி கொண்டுள்ளனர்.

மொராயிசின் மரணத்திற்கான காரணத்தை பிரதேப் பரிசோதனை இதுவரை நிர்ணயிக்காத காரணத்தால் அவருடைய சடலத்தின் மீது இரண்டாவது பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.