Home Featured கலையுலகம் மலேசியாவில் புலி இன்று திரையீடு கண்டது!

மலேசியாவில் புலி இன்று திரையீடு கண்டது!

897
0
SHARE
Ad

puli6கோலாலம்பூர் – இன்று திரையிடப்படுமா என மலேசிய இரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த ‘புலி’ திரைப்படம் இன்று பிற்பகல் 3.00 மணி முதல் மலேசியத் திரையரங்குகளில் திரையீடு கண்டது.

லோட்டஸ் திரையரங்குகளில் பிற்பகல் 3.00 மணி காட்சிகளுக்கான அனுமதிச் சீட்டுகள் (டிக்கெட்டுகள்) விற்பனை செய்யப்பட்டு வருவதாக சில வாசகர்கள் செல்லியல் தகவல் ஊடகத்திடம் தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.

முன்னதாக, தமிழகத்தில் புலி படத்துக்கான காலைக் காட்சிகள் இரத்து செய்யப்பட்டன. நேற்று நடிகர் விஜய் மற்றும் புலி படத்தின் தயாரிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட இல்லங்களில் இந்திய வருமான வரித் துறையினர் அதிரடி சோதனைகள் மேற்கொண்டதை அடுத்து படம் வெளிவருவது இன்று தடைப்படலாம் என்ற ஆரூடங்கள் எழுந்தன.

#TamilSchoolmychoice

இருப்பினும் இன்று நண்பகல் 12.00 மணி முதல் சென்னைத் திரையரங்குகளில் புலி படத்துக்கான அனுமதிச் சீட்டு விற்பனைகள் தொடங்கியதாக தகவல் ஊடகங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், கோல்டன் ஸ்கிரின், தஞ்சோங் கோல்டன் வில்லேஜ் போன்ற திரையரங்குகளிலும், ‘புலி’ படத்துக்கான முன்பதிவுகள் இணையம் வழி மேற்கொள்ளப்படுவதாக, இணையத்தின் வழி முன்பதிவுகள் செய்த சில வாசகர்கள் செல்லியலிடம் தெரிவித்தனர்.

‘புலி’ படத்தின் திரைவிமர்சனம் இன்னும் சில மணி நேரங்களில் செல்லியலில் வெளியிடப்படும்.