Home Featured இந்தியா ‘மேக் இன் இந்தியா’ உபதேசம் ஊருக்குத்தானா மோடி ஜி!

‘மேக் இன் இந்தியா’ உபதேசம் ஊருக்குத்தானா மோடி ஜி!

507
0
SHARE
Ad

புது டெல்லி – ‘மேக் இன் இந்தியா’ (Make in India) இந்தியப் பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களுள் ஒன்று. பன்னாட்டு நிறுவனங்களும், இந்திய நிறுவனங்களும் இந்தியாவில் தங்களது தயாரிப்புகளை உருவாக்க வேண்டும், இங்கிருந்து ஏற்றுமதியை தொடங்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த திட்டம். அதாவது  ஒரு நாட்டில் இறக்குமதி குறைந்து ஏற்றுமதி அதிகமாகும் போது தான் அந்நாடு வளம் கொழிக்கும் நாடாக மாறும் என்பது இதன் அடிப்படை நோக்கம்.

மேலும், வெளிநாட்டு தயாரிப்புகளை இந்தியர்கள் குறைத்துக் கொண்டு உள்ளூர் தயாரிப்புகளை அதிகம் பயன்படுத்தத் தொடங்கினால் இந்திய நிறுவனகளின் வளர்ச்சி ஏறுமுகத்தில் இருக்கும் என மோடி அரசு தொடர்ந்து பிரச்சாரங்களை செய்து வருகிறது.

இப்படி தொடர் உபதேசங்களை வழங்கி வரும் பிரதமர் மோடி, தனது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் முக்கிய பொருட்கள் என்னென்ன, அவற்றின் தயாரிப்பு வரலாறு பற்றி ஊடகங்களில் வெளியாகி உள்ள தகவல்கள் குறித்து பார்வை பின்வருமாறு:

#TamilSchoolmychoice

1-bvlgari-glassesபுகழ்பெற்ற பல்கேரி நிறுவனத்தின் குளிர்கண்ணாடி

mont-blanc-penஜெர்மனி மோண்ட் பிளாங்க் பேனா

movado-watchசுவிஸ் நிறுவனமான மொவேடோ கைக்கடிகாரம்

iphoneபிரபல ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்

cufflinksவான் ஹுசைனின் சட்டைக் கை இணைப்புகள்

இவை அனைத்தும் வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகள் என ஊடகங்கள் ஆதரங்களுடன் கூறி வருகின்றனர். மேலும், உபதேசத்தை தலைவர்கள் தன்னிடம் இருந்து தொடங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து வருகின்றன.