Home Featured நாடு 10 வது மாடிக் கூரையில் சிக்கிய நாய்குட்டி! போராடி மீட்ட புஸ்பராணி குழுவினர்!

10 வது மாடிக் கூரையில் சிக்கிய நாய்குட்டி! போராடி மீட்ட புஸ்பராணி குழுவினர்!

723
0
SHARE
Ad

Pushpaகோலாலம்பூர் – சிலவற்றை சிலரால் மட்டுமே செய்ய முடியும் என்பதற்கு உதாரணமாக இந்த மனதைத் தொடும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

டிராப்பிகானாவிலுள்ள பெர்மாய் அடுக்குமாடிக் குடியிருப்பில் 10 வது தளத்தின் மேற்க் கூரையில் கடந்த இரண்டு வாரங்களாக நாய்குட்டி ஒன்று சிக்கித் தவித்து வந்துள்ளது.

அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பக்கத்து அடுக்குமாடிக் குடியிருப்பைச் சேர்ந்தவர், உடனடியாக தீயணைப்புப் படையினருக்கு அழைத்து தகவலைச் சொல்லியுள்ளார். ஆனால் அந்த நாய்குட்டி கூரையின் மேல் அங்குமிங்கும் ஓடித் திரிவதால், அதனைக் காப்பாற்றுவது சிரமம் என்று அவர்கள் கூறியுள்ளனர். அவர்களே இப்படி கூறிவிட்டதால் சோகமடைந்த அவர் அதை விடுத்து அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டார்.

#TamilSchoolmychoice

அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வாசிகளும், நிர்வாகமும் கூட சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளைத் தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகின்றது. அங்கிருந்தும் எந்த உதவியும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

Dog rescue

இந்நிலையில், நேற்று மீண்டும் அந்த அடுக்குமாடிக் கூரையில் அந்த நாய் பசியுடன் அலைந்து திரிவதைப் பார்த்து மிகவும் பரிதாபப்பட்ட அந்த நபர், உடனடியாகப் படம் பிடித்து ‘மலேசிய தன்னார்வ விலங்குகள் மீட்புக்குழு’ (Malaysia Independent Animal Rescue) அமைப்பின் தலைவர் புஸ்பராணியின் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தார்.

அந்த சிறுபிராணியின் உயிரைக் காப்பாற்ற வழக்கம் போல், தன் குழுவினருடன் இன்று காலை புறப்பட்டார் அந்த தேவதை.

விலங்குகள் ஆர்வலர்களும், சிறுபிராணிகளை நேசிப்பவர்களும் ஆவலோடு காத்திருக்க சற்று முன்பு வந்தது அந்தத் தகவல். ஒருமணி நேரம் போராடி அந்த சிறுபிராணியை வெற்றிகரமாக புஸ்பராணியின் அமைப்பில் பணியாற்றும் டிஜெ ஜானிஸ் காப்பாற்றியுள்ளார்.

அதற்கு பெர்மாய் அடுக்குமாடிக் குடியிருப்பின் நிர்வாகியான வு ஹாய் ஃபெங்கும் உதவியாக இருந்துள்ளார்.

தற்போது மீட்கப்பட்ட அந்த நாய்குட்டிக்கு ‘பேட் கேர்ள்’ எனப் பெயரிட்டுள்ள புஸ்பராணி, அதிர்ச்சியில் இருக்கும் அதற்கு தேவையான மருத்துவ உதவிகளைப் பெற தன்னார்வலர்களைத் தேடி வருகின்றார்.

Dog rescue 1

‘பேட் கேர்ள்’ -க்கு மருத்துவ உதவி அளிக்க நினைப்பவர்கள் இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம் 011 33782755/ 016 9975301. 

அவ்வளவு உயரத்திற்கு நாய் எப்படி சென்றது என்பது ஆச்சர்யம் தான்.. ” Bat Girl” என்ற பெயர் அதற்கு சரியாகப் பொருந்துகிறது.

https://fbstatic-a.akamaihd.net/rsrc.php/v2/y4/r/-PAXP-deijE.gif

–  ஃபீனிக்ஸ்தாசன்