Home Featured தொழில் நுட்பம் ‘டெலிகிராம்’ செயலியை சாதகமாக்கிக் கொள்ளும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு!

‘டெலிகிராம்’ செயலியை சாதகமாக்கிக் கொள்ளும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு!

734
0
SHARE
Ad

telegramகோலாலம்பூர் – வாட்சாப், டுவிட்டர் போன்று டெலிகிராம் என்றொரு புதிய செயலி தற்போது இளைஞர்களிடையே பிரபலமாகி வருகின்றது. கடந்த 2013-ம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த நிக்கோலாய் மற்றும் பேவல் டுராவ் என்ற சகோதரர்களால் உருவாக்கப்பட்ட இந்த செயலி தகவல் பரிமாற்றங்களுக்குப் பயன்படுத்தலாம்.

இந்நிலையில், இந்த செயலியை உலகை அச்சுறுத்தி வரும் தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருவதாக பிபிசி உள்ளிட்ட முக்கிய இணையதளங்கள் தெரிவித்துள்ளன.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகள் தங்களின் தகவல் பரிமாற்றங்களுக்குப் பயன்படுத்தி வந்த டுவிட்டர் பக்கங்களை அந்நிறுவனம் கட்டுப்படுத்தியதைத் தொடர்ந்து தற்போது டெலிகிராமில் புதிய பிரிவைத் துவங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

டெலிகிராமில் ஐஎஸ்ஐஎஸ் உருவாக்கியிருக்கும் குழுவில் 4,500 உறுப்பினர்கள் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஏமனிலுள்ள ஏடென் நகரில் அண்மையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை செயல்படுத்தத் தேவையான அறிவிப்புகளை செய்ய, ஐஎஸ் அமைப்புகள் டெலிகிராம் செயலியை ஒரு கருவியாகப் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.