Home Featured உலகம் சிங்கப்பூர் ஜூரோங் தீ விபத்து – ஒருவர் பலி! 7 பேர் காயம்!

சிங்கப்பூர் ஜூரோங் தீ விபத்து – ஒருவர் பலி! 7 பேர் காயம்!

655
0
SHARE
Ad

CRFoW92UEAAxedUசிங்கப்பூர் – ஜூரோங் பகுதியிலுள்ள தஞ்சோங் கிலிங் என்ற இடத்தில் அமைந்திருக்கும் கிடங்கு ஒன்றில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

எனினும், அங்கு வெடிவிபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூரர்கள் தெரிவித்துள்ளதாக முக்கிய செய்தி இணையதளம் கூறியுள்ளது.

சேத விவரங்கள் இன்னும் முழுமையாகத் தெரியாத நிலையில், அங்கு மிகப் பெரிய அளவிலான மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் அப்பகுதியைத் தவிர்க்கும் படியும் செய்திகள் வெளியாகியுள்ளன.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் ஒருவர் பலியாகியிருப்பதாகவும், 7 பேர் காயமடைந்திருப்பதாகவும் தற்போதைய செய்திகள் கூறுகின்றன.