Home Featured இந்தியா தங்க மனிதருக்கு டில்லியில் வெண்கலச் சிலை!

தங்க மனிதருக்கு டில்லியில் வெண்கலச் சிலை!

829
0
SHARE
Ad

Abdul kalamபுதுடெல்லி – குணத்தில் சொக்கத் தங்கமாய் வாழ்ந்து மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் பிறந்தநாளான இன்று, டெல்லியில் அவரது நினைவாக உருவச் சிலை ஒன்றைத் திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

இளைய தலைமுறையினருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் நினைவிடம் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மேலும், அப்துல்கலாம் இல்லாத நிலையில் அவரது எண்ணங்களை பூர்த்தி செய்வது சவாலானது. சொந்த ஊரில் அப்துல்கலாமுக்கு நினைவிடம் கட்ட நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“இளைய தலைமுறையினருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், அப்துல் கலாம் அவர்களின் நினைவிடம் அமைக்கப்படும். அவரது வாழ்க்கை இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக இருக்கும். ஆயுதங்களால் மட்டுமல்ல மக்களாலும் நாட்டை வலுப்படுத்த முடியும் என கலாம் கருதினார்” என்று மோடி தெரிவித்துள்ளார்.