Home Featured தமிழ் நாடு பொறியாளர் கோகுல்ராஜ் கொலை வழக்கு: சரணடைந்த யுவராஜ் வெளியிட்ட திடுக் தகவல்!

பொறியாளர் கோகுல்ராஜ் கொலை வழக்கு: சரணடைந்த யுவராஜ் வெளியிட்ட திடுக் தகவல்!

577
0
SHARE
Ad

yuavaraj1சேலம் – சேலத்தைச் சேர்ந்த பொறியாளர் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில், நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்து வந்த யுவராஜ்(படம்) என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார்.

அவரிடமும், இந்த கொலை வழக்கில் தொடர்புடையவராக சந்தேகிக்கப்படும் அருண் (யுவராஜின் கார் ஓட்டுனர்) என்பவரிடமும் சிபிசிஐடி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல்வேறு உண்மைகள் தெரிய வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

விசாரணையின் போது அருண், அதிகாரிகளிடம்  ‘கோகுல்ராஜை கொலை செய்தது யார்? எப்படி கொலை செய்யப்பட்டார்?’ என்பது குறித்த விவரங்களை அளித்ததாகவும், அதன் அடிப்படையில் அதிகாரிகள், யுவராஜிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், இதுதொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் இதுவரை எந்தவொரு தகவல்களையும் வெளியிடவில்லை.

#TamilSchoolmychoice

gokulrajஇதற்கிடையே அதிகாரிகள், கோகுல்ராஜ்(படம்) சடலமாக கிடந்த பகுதிக்கு யுவராஜை நேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

முன்னதாக இந்த கொலை வழக்கு தொடர்பாக ஏற்பட்ட நெருக்கடியினால், இந்த வழக்கை விசாரித்த காவல்துறை உயர் அதிகாரி விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்து கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கது. சரணடைந்த யுவராஜை காவல்துறையினர் சுமார்vishnupriya மூன்று மாத காலங்களாக தேடி வந்தனர். எனினும், அவர்களால் யுவராஜை பிடிக்க முடியவில்லை.

இடைப்பட்ட காலங்களில், யுவாராஜ் தான் நிரபராதி என்றும், கோகுல்ராஜ் கொலை வழக்கு, விஷ்ணுப்பிரியா(படம்) தற்கொலை ஆகியவற்றுக்கு உண்மையான காரணம் கிடைக்க வேண்டும் என்றால், காவல்துறை நியாயமான முறையில் விசாரணை செய்ய வேண்டும் என்றும் பல்வேறு நட்பு ஊடகங்கள் மூலம் பேட்டிகள் கொடுத்து இருந்தார்.