Home Featured வணிகம் “இந்திய வாடிக்கையாளர்களுக்கு நன்றி” – டிம் குக்

“இந்திய வாடிக்கையாளர்களுக்கு நன்றி” – டிம் குக்

682
0
SHARE
Ad

cookபுது டெல்லி – ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கான எதிர்பார்ப்பு மேற்கத்திய நாடுகளைப் போலவே இந்தியாவிலும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதற்கு ஐபோன் 6-ன் வெளியீடு முந்தைய உதாரணமாக இருந்தாலும், தற்போதய உதாரணம் ஐபோன் 6 எஸ் தான்.

அக்டோபர் 16 (இன்று) அதிகாலை சரியாக 12 மணிக்கு இந்தியாவில் வெளியான ஐபோன் 6 எஸ் மற்றும் ஐபோன் 6 எஸ் பிளஸ் திறன்பேசிகளுக்காக மக்கள் இரவு முதலே காத்திருந்தனர்.

இதுவரை இந்தியாவில் வெளியான திறன்பேசிகளில், விலை அதிகமுள்ள திறன்பேசி ஐபோன் 6 எஸ் பிளஸ் தான். இந்தியாவில் ஆப்பிளின் இந்த வெளியீடு, கண்டிப்பாக பெரிய வர்த்தகத்தை ஈட்டித் தராது என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில், டெல்லியில் ஆண்களும், பெண்களும் வரிசையில் நின்று ஐபோன்களை வாங்கிச் சென்றது ஆப்பிள் நிறுவனத்திற்கே ஆனந்த அதிர்ச்சியை கொடுத்திருக்கும்.

#TamilSchoolmychoice

அதனை உறுதிபடுத்தும் விதமாக, ஆப்பிள் தலைவர் டிம் குக், தனது டுவிட்டர் பதிவில், “நள்ளிரவிலும், ஐபோன் 6 எஸ் மற்றும் ஐபோன் 6 எஸ் பிளசிற்காக வரிசையில் காத்திருந்த இந்திய வாடிக்கையாளர்களுக்கு நன்றி” என்று அவர் தெரிவித்துள்ளார்.