Home Featured தமிழ் நாடு “உங்களுக்காகவே உயிர் வாழ்கிறேன்” – ஜெயலலிதா உருக்கமான கடிதம்!

“உங்களுக்காகவே உயிர் வாழ்கிறேன்” – ஜெயலலிதா உருக்கமான கடிதம்!

415
0
SHARE
Ad

jayalalithaசென்னை – அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 44-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் எழுதி உள்ள கடித்தத்தில் பல்வேறு உருக்கமான விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஜெயலலிதா வெளியிட்டுள்ள அந்த கடிதத்தில், “எனக்கென்று தனிப்பட்ட வாழ்வு இல்லை. எனக்கென்று தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை. நான் வாழ்வதே இந்த இயக்கத்திற்காகத்தான். தமிழக மக்களுக்காகத்தான். ஒவ்வொரு நொடிப் பொழுதும் நம்முடைய இயக்கத்தைப் பற்றியும், தமிழ் நாட்டு மக்களுக்கு இந்த இயக்கம் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியும் தான் நான் சிந்தித்த வண்ணம் இருக்கிறேன்.”

“தமிழக மக்களின் மகிழ்ச்சிதான் எனது லட்சியம். தமிழக மக்களின் வளர்ச்சியும், வளமான வாழ்வும்தான் நான் காண விரும்பும் இலக்குகள். உங்களுக்காகவே உயிர் வாழ்கிறேன் என்பதை நான் ஆத்மார்த்தமாக உணர்கிறேன். இறைவன் எனக்கு விடுத்த அழைப்பாகவே இந்த வாழ்வை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், தற்போதய அவரின் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களை குறிப்பிட்ட அவர்,  “வெற்றிக்கான பணிகள் அனைத்தையும் இந்த ஆண்டு விழா கொண்டாட்டத்திலேயே தொடங்கிடுவீர் என்று உங்கள் அனைவருக்கும் அன்புக் கட்டளை இடுகிறேன்” என தேர்தலை கருத்தில் கொண்டு தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.