Home Featured தொழில் நுட்பம் “இந்தியர்களே! கேள்விகளுக்கு தயாராகுங்கள்..நான் வருகிறேன்” – மார்க் சக்கர்பெர்க்

“இந்தியர்களே! கேள்விகளுக்கு தயாராகுங்கள்..நான் வருகிறேன்” – மார்க் சக்கர்பெர்க்

524
0
SHARE
Ad

markzuckerbergபேலோ ஆல்டோ – பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், வரும் 28-ம் தேதி, பேஸ்புக் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான செயல்திட்டங்களை வகுக்க இந்தியா வர இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பினை தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள மார்க், வழக்கமாக அவர் நடத்தும் கேள்வி பதில் நிகழ்ச்சிக்கும் தயாராக இருக்கும் படி, இந்தியர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, மார்க் இந்தியப் பிரதமர் மோடியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, பேஸ்புக்கின் முக்கிய திட்டமான ‘ஃப்ரீ பேசிக்ஸ்’ (Free Basic) குறித்து இந்தியாவில், பிரச்சாரங்களை மேற்கொள்வதற்காகத் தான் மார்க், இந்தியாவிற்கு வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

MARK_ZUCKERBERG-FA_2145982fஃப்ரீ பேசிக்ஸ் என்பது, இந்தியாவில் பேஸ்புக் அறிமுகப்படுத்தி சர்ச்சைக்குள்ளான ‘இன்டர்நெட்.ஆர்க்’ (Internet.org) என்பதன் மறுவடிவம் தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.